1600 சிரீஸ் தொலைபேசி எண்களையை காப்பீடு நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, இதை முழுவதும் செயல்படுத்த பிப்ரவரி 15-ம் தேதி வரை டிராய் காலக்கெடு விதித்துள்ளது.
பொதுமக்கள் போலி தொலைபேசி அழைப்புகளை நம்பி ஏமாறாமல் தடுக்க டிராய் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக தற்போது காப்பீடு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கு டிராய் உத்தரவு பிறப்பித்துள்ளது.
1600 சிரீஸில் தொடங்கும் தொலைபேசி எண்களையே பயன்படுத்த வேண்டும். இதை பிப்ரவரி 15-ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என டிராய் கேட்டுக் கொண்டுள்ளது.
டிராயின் இந்த உத்தரவால், வழக்கமான தொலைபேசி அழைப்புகள், காப்பீடு நிறுவனங்களின் அழைப்புகளை பொதுமக்களால் எளிதில் அடையாளம் காண முடியும். இதனால் காப்பீடு நிறுவனங்களின் பெயரில் நடக்கும் மோசடிகள் குறைய வாய்ப்புள்ளது.
