MGR பெயர் இருக்கக்கூடாது என்ற திமுகவின் யோசனையால் MGNREGA என காங்கிரஸ் பெயர் வைத்ததாக தம்பிதுரை எம்.பி. சாடியுள்ளார்.
‘100 நாள் வேலைத் திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் பெயரை விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ என மத்திய அரசு மாற்றியுள்ளது. இதுதொடர்பான மசோதவையும் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மசோதா மீது மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. மசோதாவின்படி இந்தத் திட்டத்திற்கு விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது.
இந்தநிலையில், மாநிலங்களவையில் VB G RAM G மசோதாவை ஆதரித்து பேசியபோது, “MGR பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே..”MGNREGA திட்டத்தில் MGNREGA என்பதில் N சேர்க்க காங்கிரஸுக்கு திமுக யோசனை கூறியதாக அதிமுக எம்.பி. தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார். அதாவது, எம்ஜிஆர் Mahatma Gandhi Rural Employment Guarantee Act என்பதே சட்டத்தின் பெயராக சூட்டப்பட இருந்தது. அதை சுருக்கினால் MGREGA என்பதில் தலைவர் எம்.ஜி.ஆர். பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, திமுக யோசனையால் National என்பதை சேர்த்து MGNREGA என காங்கிரஸ் ஆக்கியது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
