2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பாமகவில் விருப்ப மனுக்கள் வழங்குவதற்கான கால அவகாசம் வரும் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடமிருந்து 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், தாங்களும் மனு தாக்கல் செய்ய வசதியாக காலக்கெடுவை மேலும் சில காலத்திற்கு நீடிக்க வேண்டும் என ஏராளமானோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதை ஏற்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை வழங்குவதற்கான காலக்கெடு டிசம்பர் 27-ஆம் நாள் சனிக்கிழமை வரை நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
