Close Menu
    What's Hot

    சூழ்நிலைக்கேற்ப மனதை மாற்றிக் கொள்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்; அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

    திருமாவுக்கு துணை முதல்வர் பதவி!. திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும்!. விசிக கூட்டத்தில் தீர்மானம்!

    மின்பகிர்மான கழக ஓய்வு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! சம்பள உயர்வுக்கு புதிய உத்தரவு அமல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»மது விற்று பணம் சம்பாதிக்கிறது திமுக அரசு: சவுமியா அன்புமணி சாடல்
    அரசியல்

    மது விற்று பணம் சம்பாதிக்கிறது திமுக அரசு: சவுமியா அன்புமணி சாடல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sssss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அதிகளவில் மதுபானங்களை விற்று பணம் சம்பாதித்து வருகிறது என பசுமைத்தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

    ‘சிங்கப் பெண்ணே எழுந்து வா’ என்ற முழக்கத்தோடு தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இன்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயண நிகழ்வில் சௌமியா அன்புமணி பேசியதாவது: ஆந்திர எல்லையையொட்டியுள்ள மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் கஞ்சா புழக்கத்தில் உள்ளது.

    இளைஞர்களிடையே உள்ள போதை பழக்கத்தால் பொதட்டூர்பேட்டையில் இன்சூரன்ஸ் பணத்துக்காக இரு மகன்கள் தந்தையை பாம்பு கடிக்கச் செய்து கொன்றுள்ளனர். கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

    தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நெசவாளர்கள், விவசாயிகள் அதிகம் வசிக்கும் திருத்தணி பகுதியில், நெசவு பூங்கா அமைக்கப்படும், நறுமணப் பொருட்கள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும் என, திமுக வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மதுபானங்களை அதிகளவில் விற்று பணம் சம்பாதித்து வருகிறது திமுக அரசு.

    திருத்தணி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக பெயரளவில் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆனால், மக்கள் கேட்காமலேயே 108 ஆம்புலன்ஸ் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தவர் அன்புமணி. ஆகவே, அன்புமணியை தேர்தலில் வெற்றி பெற செய்தால் நிறைய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவார்.

    பெண்கள் உள்ளாட்சி நிர்வாக பதவிகளுக்கு அதிக அளவில் போட்டியிட்டு வெற்றி பெற்று தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“சினிமாவில் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை” – இயக்குநர் சுதா கொங்கரா
    Next Article இன்றைய ராசிபலன் @ 22 டிசம்பர் 2025
    Editor TN Talks

    Related Posts

    சூழ்நிலைக்கேற்ப மனதை மாற்றிக் கொள்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்; அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

    July 4, 2026

    மளமளவென சரியும் அதிமுக கோட்டை..!! இதுவரை 32% பேர் விலகல்..!! அப்செட்டில் இபிஎஸ்..!!

    July 4, 2026

    அவதூறு வழக்கிற்கு 6 மணி நேரம் விசாரணையா..?? திமுக நிர்வாகி சரமாரி கேள்வி..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சூழ்நிலைக்கேற்ப மனதை மாற்றிக் கொள்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்; அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

    திருமாவுக்கு துணை முதல்வர் பதவி!. திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும்!. விசிக கூட்டத்தில் தீர்மானம்!

    மின்பகிர்மான கழக ஓய்வு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! சம்பள உயர்வுக்கு புதிய உத்தரவு அமல்..!!

    மளமளவென சரியும் அதிமுக கோட்டை..!! இதுவரை 32% பேர் விலகல்..!! அப்செட்டில் இபிஎஸ்..!!

    செந்தில் பாலாஜி, அசோக்குமார் விவகாரத்தில் புதிய திருப்பம்..!! பெற்றோர் கைக்கு போன சம்மன்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.