Close Menu
    What's Hot

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    பாகிஸ்தானிடம் படுதோல்வி!. கேப்டன், கோச் மீது நடவடிக்கையா?. பிசிசிஐ அதிரடி!

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»இனிதான் நம் முழு பலத்தையும் கொடுத்து ஓடவேண்டும்: திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
    அரசியல்

    இனிதான் நம் முழு பலத்தையும் கொடுத்து ஓடவேண்டும்: திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 22, 2025Updated:December 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வெற்​றியை நெருங்​கும் நேரத்​தில் பதற்​றமோ, அசதியோ கூடாது. இனி​தான் நம் முழு பலத்​தை​யும் கொடுத்து ஓடவேண்​டும் என்று திமுக மாவட்​டச் செய​லா​ளர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

    வரைவு வாக்​காளர் பட்​டியல் சரி​பார்த்​தல் குறித்த திமுக மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டம், காணொலி வாயி​லாக நடை​பெற்​றது. இதில் திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது:

    தமிழகத்​தில் எஸ்​ஐஆர் பணி​களை அவசரக​தி​யில் ஆரம்​பித்​த​போதே இது பல்​வேறு முறை​கேடு​களுக்கு வழி​வகுக்​கும். தகு​தி​யான வாக்​காளர்​கள் நீக்​கப்பட வாய்ப்​புள்​ளது என்று எச்​சரித்​தோம்.

    உச்ச நீதி​மன்​றத்​தி​லும் வழக்கு தொடுத்​தோம். அதன்​படியே, எஸ்​ஐஆர் மூலம் 15 சதவீதம் பேர், அதாவது 97 லட்​சம் வாக்​காளர்​களை நீக்​கி, வரைவுப் பட்​டியலை தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டுள்​ளது. இடம் பெயர்ந்​தவர்​கள் என்று மட்​டும் சுமார் 66 லட்​சம் பேரை நீக்​கி​யுள்​ளனர்.

    குறிப்​பாக 168 தொகு​தி​களில் 10 சதவீதத்​துக்​கும் அதி​க​மான வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர். இதை நாம் வாக்​குச்​சாவடி வாரி​யாக சரி​பார்க்க வேண்​டும். உதா​ரண​மாக கும்​மிடிப்​பூண்​டி​யில் முதல் வாக்​குச்​சாவடி​யில் 40 வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர். அதில் 4 பேர் ஓரணி​யில் தமிழ்​நாடு முன்​னெடுப்பு மூல​மாக சேர்ந்​தவர்​கள்.

    அதில் ஒரு​வர் இறந்​து​ விட்​ட​தாக கூறி​யுள்​ளனர். அதே​போல், மற்ற 3 பேரை​யும் எதற்​காக நீக்​கினர் என்று சரி​பார்க்க வேண்​டும். நாம் களத்​தில் முழு​மை​யாக இறங்கி பணி செய்​கிறோம்.

    மறு​புறம் அதி​முக​வும், பாஜக​வும் களத்​துக்கே வரவில்​லை. அதனால்​தான் நாம் சந்​தேகப்பட வேண்​டி​யுள்​ளது. எனவே, நீக்​கப்​பட்​ட​தில் நம் வாக்​காளர்​கள் இருக்​கிறார்​களா என கவன​மாக பார்க்க வேண்​டும்.

    நான் வாக்​குச்​சாவடி வாரி​யாக உன்​னிப்​பாக கவனித்து வரு​கிறேன். ஒரே ஒருத்​தர் தவறு​தலாக விடு​பட்டு இருந்​தால்​கூட வாக்​காளர் பட்​டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். இது அனைத்து மாவட்​டச் செய​லா​ளர்​கள், தொகுதி பார்​வை​யாளர்​களின் பொறுப்​பாகும்.

    ஒவ்​வொரு வாக்​குச்​சாவடி​யிலும் நீக்​கப்​பட்​ட​வர்​கள் பட்​டியலும் அதில் யாரெல்​லாம் ஓரணி​யில் தமிழ்​நாடு உறுப்​பினர்​கள் என்ற விவர​மும் இன்​றைக்​குள் (டிசம்​பர் 22) மாவட்​டச் செய​லா​ளர்​களுக்கு அனுப்பி வைக்​கப்​படும். விவரங்​களை முழு​மை​யாக சரி​பார்த்து விடு​படல் இல்​லாத​வாறு பார்த்​துக்​கொள்ள வேண்​டும். மேலும், புதிய வாக்​காளர்​கள் சேர்க்​கப்​ படு​வதை​யும் கவனிக்க வேண்​டும். போலிகள் இல்லாமல் பார்த்​துக் கொள்ள வேண்​டும்.

    இதுத​விர, வாக்​குச்​சாவடிகளின் எண்​ணிக்கை 75,032 ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. பூத் எண் மட்​டும் மாறிய வாக்​குச்​சாவடிகளுக்​கு, ஏற்​கெனவே நியமிக்​கப்​பட்​டுள்ள பிஎல்ஏ 2-க்​கள் தொடர வேண்​டும். புதி​தாக உரு​வாக்​கப்​பட்​டுள்ள வாக்​குச்​சாவடிகளுக்கு புதிய பொறுப்​பாளர்​களை நியமிக்க வேண்​டும். நம்மை நேர்​வழி​யில் வீழ்த்த முடி​யாத எதிரி​கள் குறுக்கு வழி​யில் காரி​யம் சாதிக்க நினைப்​பார்​கள். அதற்கு கடு​களவு​கூட இடம் தரக்​கூ​டாது.

    வெற்​றியை நெருங்​கும் நேரத்​தில் பதற்​றமோ, அசதியோ கூடாது. இனி​தான் நம் முழு பலத்​தை​யும் கொடுத்து ஓடவேண்​டும். களத்​தில் நாம்​தான் வலிமை​யாக உள்​ளோம். நம் கூட்​ட​ணி​தான் வெற்​றிக் கூட்​ட​ணி. வெற்​றியை எட்​டும் வரை கவனம் சிதறாமல் உழை​யுங்​கள்.

    இவ்​வாறு அவர் பேசி​னார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜோதிட நாள்காட்டி 22.12.2025 | மார்கழி 07
    Next Article இரவு, பகலாக 4-வது நாளாக போராடும் செவிலியர்கள்: அமைச்சர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
    Editor TN Talks

    Related Posts

    விஜய்யுடன் கூட்டணியா?. சூசகமாக தெரிவித்த காங்.,! திமுகவுடன் விரிசல்?.

    December 23, 2025

    முதல்வர் ஸ்டாலின் வீடு, காருக்கு வெடிகுண்டு மிரட்டல்: மதுபோதையில் இருந்த நபர் பிடிபட்டார்

    December 23, 2025

    கிறிஸ்துமஸ் விடுமுறை! 900 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    பாகிஸ்தானிடம் படுதோல்வி!. கேப்டன், கோச் மீது நடவடிக்கையா?. பிசிசிஐ அதிரடி!

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    December 23, 2025

    அரசியலுக்கு வராமலேயே நல்லது செய்ய முடியும்: சிவராஜ்குமார் கருத்து

    December 23, 2025

    விமான ஓடுதளத்தில் தேர்வு: 187 இடத்துக்கு 8,000 பேர் போட்டி

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.