ஈரோட்டில் நடைபெற்ற தவெக மாநாட்டில் விஜய்க்காக சேர்ந்த கூட்டத்தை பார்த்து உண்மையில் நான் அதிர்ச்சி அடைந்தேன் என்று நடிகையும், ஆந்திர அரசியல்வாதியுமான ரோஜா கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் கடந்த 18ம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, 81 நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பொதுவெளியில் பரப்புரை நிகழ்த்தினார், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனின், தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில்தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது, பல்வேறு எதிர்பார்ப்புகள், சூழ்ச்சிகளுக்கிடையே நடந்த இந்த நிகழ்ச்சியில், தவெக தொண்டர்கள், பொதுமக்கள் என கூட்டம் அலை மோதியது.
இதுகுறித்து பேசிய நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா, ஈரோட்டில் இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்க்கும்போது நிஜமாகவே ஷாக்காக இருந்தது என்று கூறியுள்ளார். நாங்க கவர்மெண்ட்ல முதலமைச்சருக்கு ஒரு மாநாட்டில் மீட்டிங் நடத்த வேண்டும் என்றால், அதற்கு பல பேர் விடிய விடிய வேலை செய்ய வேண்டும் என்பது எனக்கு நல்லாவே தெரியும். அந்த மீட்டிங்கை நடித்த, மினிஸ்டர், எம்எல்ஏ, எம்பி, எஸ்பி, கலெக்டர் என அனைவரும் ஒன்றாக சேர்த்து வேலை செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் அந்த மீட்டிங் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால், அனைவரும் ஒத்துழைத்தால் தான் பெரிய மீட்டிங் நடத்த முடியும்.
ஆனால், தமிழக வெற்றிக்கழகத்தில் ஆட்கள் இல்லை, பெரிய ஆளு இல்லாத போதும். இவ்வளவு பெரிய மீட்டிங்கை விஜய் எப்படி செஞ்சாருன்னு சத்தியமா எனக்கு புரியவே இல்ல. மக்கள் விஜய்யிடம் ஒரு விஷயத்தை எதிர்பார்க்கிறார்கள். விஜய் சார் அதை தெரிந்து கொண்டு மக்களுக்கு, அதை கொடுக்கும் போது தான் மக்கள் ஆதரவு விஜய்க்கு கண்டிப்பா இருக்கும் என்று நடிகை ரோஜா பேசி உள்ளார்,.
