கோவாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருப்பதன் மூலம் வளர்ச்சிக்கும், சிறந்த நிர்வாகத்துக்கும் மக்கள் துணை நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. அண்மையில் கோவா ஜில்லா பரிஷத்துகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வடக்கு கோவாவில் பாஜக 13 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், தெற்கு கோவாவில் பாஜக 10 மற்றும் காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றன. மற்ற இடங்களில் மாநில கட்சியினரும், சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ள அறிக்கையில், சிறந்த நிர்வாகத்துக்கு கோவா மக்கள் துணையாக நிற்பதாகவும், வளர்ச்சி அரசியலுக்கு அவர்கள் துணையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்த கோவா சகோதர் சகோதரிகளுக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் கனவுகளையும் லட்சியங்களையும் மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். கடினமாக உழைக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் களத்தில் பாராட்டுக்குரிய பணிகளை செய்துள்ளதாக அவர் புகழ்ந்துள்ளார். இந்த வெற்றிக்கு அவர்களின் கடின உழைப்பே வழிவகுத்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
