Close Menu
    What's Hot

    பெண்களின் ஆடை பற்றி சர்ச்சை பேச்சு: நடிகருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

    பாலிவுட் நாவலை காப்பியடித்ததாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சிக்கல்

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»அமெரிக்காவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்தி இஸ்ரோ சாதனை
    இந்தியா

    அமெரிக்காவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிறுத்தி இஸ்ரோ சாதனை

    Editor TN TalksBy Editor TN TalksDecember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    isro 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இஸ்ரோ வரலாற்றில் அதிக எடை கொண்ட ‘புளூபேர்ட் பிளாக்-2’ செயற்கைக்கோ-ளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வணிக ரீதியாகவும் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி, அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட்-6 செயற்கைக் கோளை விண்ணில் ஏவுவதற்கு, இஸ்ரோவின் என்எஸ்ஐஎல்(நியூஸ் ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்) அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்த செயற்கைக்கோள் அதிக எடை கொண்டது என்பதால், இந்தியாவின் பாகுபலி ராக்கெட்டான எல்விஎம் 3 மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து  விண்வெளிக் கழிவுகள் இடையேயான மோதலை தவிர்க்க ராக்கெட் 90 வினாடிகள் தாமதமாக ஏவப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட சுமார் 16 நிமிடங்களில், ராக்கெட் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் புளூபேர்ட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது. இந்த வெற்றியின் மூலம் 1993-ம் ஆண்டு முதல் இதுவரை 34 வெளிநாடுகளை சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தி உள்ளது.

    தகவல் தொடர்புக்காக உருவாக்கப்பட்ட இந்த புளூபேர்ட் செயற்கைக்கோள், சுமார் 6,100 கிலோ எடை கொண்டது. விண்வெளியில் இருந்து நேரடியாக செல்போன்களுக்கு அதிவேக இணைய சேவையை வழங்குவது தான் இதன் பிரதான நோக்கம். இதன்மூலம் சிக்னல் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி போன்ற சேவைகளை பெற முடியும். மேலும், இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தியதிலேயே இதுதான் அதிக எடையுள்ள செயற்கைக்கோளாகும். இதனால் சர்வதேச சந்தையில் இஸ்ரோவின் வர்த்தக மதிப்பு உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எல்விஎம் 3 ராக்கெட்டின் 9-வது தொடர்ச்சி யான வெற்றிகரமான பயணம் இதுவாகும். இதன் மூலம் எல்விஎம் 3 ராக்கெட் 100 சதவீத நம்பகத்தன்மையை பெற்றுள்ளது. ஏற்கெனவே சந்திரயான்-3, ஒன் வெப் செயற்கைக்கோள்கள் போன்ற பல்வேறு திட்டங்களையும் எல்விஎம் 3 வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. இந்த ஏவுதலிலும் அதிக எடை கொண்ட செயற்கைக் கோளை, திட்டமிட்ட சுற்றுப்பாதைக்கு அருகில் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளோம்.

    இதன் மூலம் உலக அரங்கில் கவனிக்கக் கூடிய நிறுவனமாக இஸ்ரோ மாறியுள்ளது. தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தங்களது செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு இஸ்ரோவை தொடர்பு கொண்டு வருகின்றன. இந்த வெற்றி மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது. மேலும், குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கும் பணிகள் முடிந்து, 2027 மார்ச் மாதத்துக்குள் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.இவ்வாறு வி.நாராயணன் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்
    Next Article “பாஜகவின் முதல் அடிமை திமுகதான்” – ஸ்டாலினுக்கு விஜய் சூடான பதில்
    Editor TN Talks

    Related Posts

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    December 25, 2025

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்-பெங்களூருவில் அதிர்ச்சி

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண்களின் ஆடை பற்றி சர்ச்சை பேச்சு: நடிகருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

    பாலிவுட் நாவலை காப்பியடித்ததாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சிக்கல்

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்-பெங்களூருவில் அதிர்ச்சி

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    பெண்களின் ஆடை பற்றி சர்ச்சை பேச்சு: நடிகருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

    December 25, 2025

    பாலிவுட் நாவலை காப்பியடித்ததாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சிக்கல்

    December 25, 2025

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    December 25, 2025

    விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்-பெங்களூருவில் அதிர்ச்சி

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.