Close Menu
    What's Hot

    அரசியலுக்கு வந்தது ஏன்? யூடியூப் லைவில் அண்ணாமலை WALK THE TALK

    மகளிர் டி20 உலகக்கோப்பை: நடப்பு சாம்பியன் நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி வரலாற்று சாதனை

    மகளிர் டி20 ; அயர்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்
    இந்தியா

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 25, 2025Updated:December 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    da
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்ஸ்பெக்டர் என்று கூறி மும்​பையைச் சேர்ந்த 85 வயது முதி​யவரிடம் ரூ.9 கோடியை பறித்த கும்​பல் தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்றனர்.

    மும்​பை​யின் தாக்​குர்ட்​வார் பகு​தி​யில் வசித்து வரு​கிறார் 85 வயது முதி​ய​வர் ஒரு​வர். இவரது மகள் அமெரிக்​கா​வில் வசிக்​கிறார். கடந்த நவம்​பர் 28-ம் தேதி செல்​போனில் முதி​ய​வருக்கு ஒரு அழைப்பு வந்​துள்​ளது. அதில் பேசிய நபர் தன்னை தீபக் சர்மா என்​றும், நாசிக்​கில் அமைந்​துள்ள பஞ்​சவடி போலீஸ் நிலை​யத்​தைச் சேர்ந்த போலீஸ் இன்​ஸ்​பெக்​டர் என்​றும் கூறி அறி​முக​மாகி​யுள்​ளார். அப்​போது அவர் கூறும்​போது அந்த முதி​ய​வர் பேரில் ஆதார் அட்டை எண்​ணைக் கொண்டு வங்​கிக் கணக்கு தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், அதில் இருந்து தடை செய்​யப்​பட்ட இயக்​க​மான பாப்​புலர் பிரண்ட் ஆஃப் இந்​தியா அமைப்​புக்கு ஏராள​மான பணம் அனுப்​பி​யுள்​ள​தாக​வும் அவர் புகார் தெரி​வித்​தார். விசா​ரணைக்கு ஒத்​துழைத்​தால், உண்​மை​யான குற்​ற​வாளி​களை கண்​டு​பிடித்து விடலாம் என்ற ரீதி​யில் பேசி​யுள்​ளார்.

    தற்​போது முதி​ய​வரை டிஜிட்​டல் கைது செய்​துள்​ள​தாக​வும், இதை யாரிட​மும் தெரிவிக்க வேண்​டாம் என்​றும் அந்த நபர் கூறி​யுள்​ளார். இதையடுத்து பயந்து போன அந்த முதி​ய​வர் தனது வங்​கிக் கணக்கு விவரங்​கள், இருப்பு விவரங்​கள், பங்​குச்​சந்தை முதலீடு, மியூச்​சுவல் பண்ட் முதலீடு, நிரந்தர வைப்பு முதலீட்டு விவரங்​களை தெரி​வித்​துள்​ளார்.

    இதையடுத்து அந்த மர்ம நபர்​கள் உச்ச நீதி​மன்​றம், ஆர்​பிஐ பெயரில் போலி​யான ஆவணங்​களை அனுப்பி அவரை மிரட்​டி​யுள்​ளனர். இந்த வழக்​கி​லிருந்து விடு​தலை பெற வேண்​டும் என்​றால், முதலீடு செய்த பணத்தை தங்​களுக்​குத் தந்​து​விட​வேண்​டும் என்று மிரட்​டி​யுள்​ளனர். அந்த தொகை அனைத்​தை​யும் நீதி​மன்​றத்​தில் டெபாசிட் செய்​ய​வேண்​டும் என்​றும் விசா​ரணை முடிந்த பின்​னர் பணம் திருப்​பித் தரப்​படும் என்​றும் அவர்​கள் கூறி​யுள்​ளனர்.

    இதையடுத்து ரூ.9 கோடி பணத்தை ஆர்​டிஜிஎஸ் மூல​மாக அந்த முதி​ய​வர் கடந்த டிசம்​பர் 17-ம் தேதி அனுப்​பி​யுள்​ளார். இந்​நிலை​யில் கடந்த 22-ம் தேதி, மேலும் ரூ.3 கோடியை அனுப்​பவேண்​டும் என்று மர்ம நபர்​கள் தெரி​வித்​துள்​ளனர். இதையடுத்து கிர்​காவ்ன் பகு​தி​யிலுள்ள பாங்க் ஆஃப் இந்​தியா கிளைக்கு முதி​ய​வர் சென்​றுள்​ளார். அப்​போது, சந்​தேகம் அடைந்த வங்கி ஊழியர்​கள் அந்​தப் பணத்தை அனுப்​புவதை நிறுத்​தி, அவரின் உறவினர்​களிடம் பேசு​மாறு கூறி​யுள்​ளனர். அப்​போது தான் ஏமாற்​றப்​பட்​டதை அவர் உணர்ந்​துள்​ளார்.

    இதையடுத்து அவர் சைபர்​கிரைம் ஹெல்ப்​லைன் எண்​ணான 1930-ல் புகார் செய்​துள்​ளார். இதையடுத்து சைபர்​கிரைம்​ போலீ​ஸார்​ வழக்​குப்​ பதிவு செய்​து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

    இது போன்ற போலி அழைப்புகளை நம்பி ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருப்பது இன்றைய காலத்தில் மிக அவசியமானதாக இருக்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்-பெங்களூருவில் அதிர்ச்சி
    Next Article நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு
    Editor TN Talks

    Related Posts

    ராஜஸ்தான் கோட்டாவில் இன்று மாணவர் பேரணி; ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார்

    June 17, 2026

    பிரதமர் மோடி பேச்சைக் கேட்காத மக்கள்..! தங்கம் இறக்குமதி கடந்தாண்டை விட அதிகரிப்பு..!

    June 17, 2026

    புதுவை அமைச்சரவை விரிவாக்கம்..!! நாளை 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..!!

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசியலுக்கு வந்தது ஏன்? யூடியூப் லைவில் அண்ணாமலை WALK THE TALK

    மகளிர் டி20 உலகக்கோப்பை: நடப்பு சாம்பியன் நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி வரலாற்று சாதனை

    மகளிர் டி20 ; அயர்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

    ஃபிஃபா அப்டேட் : மெஸ்ஸின் ஹாட்ரிக் கோல் மழை..! அல்ஜீரியாவுக்கு ஆப்பு வைத்த அர்ஜென்டினா..!

    ராஜஸ்தான் கோட்டாவில் இன்று மாணவர் பேரணி; ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.