Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்
    தமிழ்நாடு

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் துணை நிற்கும்; முதல்வர் ஸ்டாலின்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cmsta
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தொழில்களுக்கு தமிழகம் தொடர்ந்து தோளோடு தோள் நின்று துணை நிற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ரூ.1,350 கோடி செலவில் நடைபெற்று வரும் தோல் இல்லா காலணி ஆலை அமைக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று உளுந்தூர்பேட்டையில் வரவிருக்கும் காலணி ஆலையை நான் பார்வையிட்டேன்.

    PouChen நிறுவனம் உலகின் மிகப்பெரிய பிராண்டட் காலணி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். உலகளாவிய வரி விதிப்புமற்றும் நிச்சயமற்ற வர்த்தகச் சூழல்கள் இருந்தபோதிலும், அவர்கள் தமிழகத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளனர்.

    வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தொழில்களுக்கு தமிழகம் தொடர்ந்து தோளோடு தோள் நின்று துணை நிற்கும். PouChen நிறுவனம் தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கள்ளக்குறிச்சியில் ரூ.2,302 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதனால் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உள்ளூர் வேலைவாய்ப்புக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்.

    2024ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற தமிழக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பெருமை எனக்குக் கிடைத்தது. இன்றைய இந்த வருகை, அவர்களின் தொலைநோக்குப் பார்வையால் மேற்கொள்ளப்பட்ட வேலைகளை காண ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்த நிகழ்வில் நைக் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்களான உதய் சிங் மேத்தா மற்றும் சாமி வைகுண்டமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    மேலும், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட ஐந்து பேருக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. நாம் கொண்டு வரும் ஒவ்வொரு முதலீடும் தமிழகத்தில் மக்களுக்கு வேலைவாய்ப்புகளாக மாறுகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    கலெக்டர் அலுவலகம் திறப்பு

    கள்ளக்குறிச்சியில் அனைத்து வசதிகளுடன், அரசின் அனைத்து துறைகளும் செயல்படும் வகையில் ரூ.139.41 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2025ல் இந்தியாவில் அதிகம் பாதித்த நோய்கள்!. என்னென்ன தெரியுமா?.
    Next Article இந்தியாவிலேயே தமிழகம் தனிகாட்டு ராஜா: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
    Editor TN Talks

    Related Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    June 9, 2026

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    June 9, 2026

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.