நாடு முழுவதும் 123 ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு முதல் இந்த 123 ரயில்களும் கூடுதல் வேகத்தில் இயக்கப்படவுள்ளன.
பயணிகளின் வசதிக்காக பெங்களூருவிலிருந்து மும்பை, ராஜஸ்தான் மற்றும் குஜராத் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், பயண நேரத்தைக் குறைக்கவும் ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஜனவரி 2026 முதல் சுமார் 123 ரயில்கள் அதிவேகமாக இயக்கப்படும். இதன் காரணமாக மொத்தம் 414 ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட உள்ளது.
இந்த மாற்றத்தின் காரணமாக பெங்களூரு – காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் 3 மணி நேரம் வரை குறையும். அதாவது 38 மணி நேரத்திலிருந்து 35 மணி நேரமாக மாறும் என்று எதிர்பார்க்கலாம். இதேபோன்று பெங்களூரு – ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் இது ஒன்றரை மணி நேரம் முன்னதாகவே சென்றடையும்.
மேலும் ஹூப்ளி – தாதர் எக்ஸ்பிரஸ் புதிய வேகத்தின் காரணமாக ஒரு மணி நேரம் முன்னதாகவே மும்பையைச் சென்றடையும். ரயில்கள் அதிவேகத்தில் இயக்கப்படவுள்ளதன் காரணமாக 414 ரயில்களுடைய கால அட்டவணை மாற்றி அமைக்கப்படவுள்ளது.
ரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையால் 2026 முதல் பெங்களூருவிலிருந்து வட மாநிலங்களுக்குச் செல்லும் பயணிகள் மிகவும் விரைவாகத் தங்கள் ஊர்களுக்குச் சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
