Close Menu
    What's Hot

    ஜோ ரூட்டிற்கே ஆடத் தெரியவில்லை.. – சொல்கிறார் உத்தப்பா

    காங்கிரசில் விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பா? செல்வ பெருந்தகை பதில்

    தினந்தோறும் போட்டோ ஷூட் நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்.. ஜெயக்குமார் விமர்சனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»ஜோ ரூட்டிற்கே ஆடத் தெரியவில்லை.. – சொல்கிறார் உத்தப்பா
    விளையாட்டு

    ஜோ ரூட்டிற்கே ஆடத் தெரியவில்லை.. – சொல்கிறார் உத்தப்பா

    Editor TN TalksBy Editor TN TalksDecember 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    jo root
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாக்சிங் டே டெஸ்ட் என்று பிரபலமாக அழைக்கப்படும் மெல்போர்ன் டெஸ்ட் அதிர்ச்சிகரமாக 2 நாட்களில் முடிவடைந்ததையடுத்து அத்தகைய வேகம், எழுச்சி, ஸ்விங் பந்துகளுக்கு சாதக ஆடுகளங்களில் செடேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே போல் ஆட வேண்டுமென்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

    மெல்போர்ன் பிட்ச் பிரச்சினை என்றால் பேட்டர்களின் ரியாக்‌ஷன் ஒரு அதிர்ச்சி என்று இயன் சாப்பல் பத்தி ஒன்றில் குறிப்பிட்டதையடுத்து இப்போது ராபின் உத்தப்பாவும் மெல்போர்ன் பிட்ச் ‘பேட் செய்யவே முடியாத’ பிட்ச் அல்ல என்று கூறியுள்ளார். பேட்டர்கள் சரியான அணுகுமுறையைக் கடைபிடித்திருந்தால் நிச்சயம் ரன்கள் ஸ்கோர் செய்திருக்க முடியும் என்கிறார் உத்தப்பா.

    அவர் யூடியூப் சேனலில் கூறும்போது, “இரு வேறுபட்ட சூழ்நிலையாகும் இது. பேட்டிங்கே சாத்தியமில்லை என்பது போன்ற பிட்ச் அல்ல மெல்போர்ன் பிட்ச். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமான ஆடுகளங்கள் உள்ளன, இன்று கிரிக்கெட் விளையாடும் விதம்தான் இதற்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

    இத்தகைய ஆடுகளங்கள் விளையாட்டுக்கு எதிரானது. ஆனால் சரியான உத்தி, சரியான அணுகும் விதம் கொண்ட மனநிலை, போராடும் குணம் இருந்தால் ஆடக்கூடியதுதான். இத்தகைய பிட்ச்களில் அதிக ரன்களை எடுக்க முடியாது, 300 ரன்கள் கூட வேண்டாம், 250 ரன்கள் வரை எடுக்க முடியும். போராட வேண்டும். புஜாரா போலவோ, அஜிங்கியா ரஹானே போலவோ உறுதியாக பேட் செய்தால் இத்தகைய மெல்போர்ன் பிட்ச் ரகங்களிலும் ரன்கள் ஸ்கோர் செய்ய முடியும்.

    . ஆஷஸ் டெஸ்ட்கள் 2 நாட்களில் முடிவடைவது நல்லதல்ல. நல்ல உத்தி உள்ள பேட்டர் என்னும் ஜோ ரூட்டே மெல்போர்னில் தொலைந்து போய் விட்டார்.

    அவருக்கே எப்படி ஆட வேண்டும் என்று தெரியவில்லை. அடித்து ஆடுவதா அல்லது நின்று ஆடுவதா என்பதில் அவருக்கே சந்தேகம். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.. அவர்கள் மீது எனக்கு கருணை ஏற்படுகிறது.” என்றார்.

    மெல்போர்ன் பிட்ச் ‘திருப்தியில்லை’ என்று ஐசிசி தெரிவித்த அதே வேளையில், இந்தியா – தென் ஆப்பிரிக்கா ஆடிய கொல்கத்தா பிட்ச் ‘திருப்திகரம்’ என்று ஐசிசி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாங்கிரசில் விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பா? செல்வ பெருந்தகை பதில்
    Editor TN Talks

    Related Posts

    விஜய் ஹசாரே டிராபி!. 7 விக்கெட்டுகளை வீழ்த்தி CSK வீரர் அபாரம்!.

    December 30, 2025

    2026 டி20 உலகக் கோப்பை!. இங்கிலாந்து அணி அறிவிப்பு!. அதிரடி வீரர்களுக்கு இடமில்லை!.

    December 30, 2025

    சூர்யகுமார் யாதவ் எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருப்பார்.. பற்ற வைத்த பாலிவுட் நடிகை.. யார் இவர்?

    December 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜோ ரூட்டிற்கே ஆடத் தெரியவில்லை.. – சொல்கிறார் உத்தப்பா

    காங்கிரசில் விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பா? செல்வ பெருந்தகை பதில்

    தினந்தோறும் போட்டோ ஷூட் நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்.. ஜெயக்குமார் விமர்சனம்

    ஆபரேஷன் சிந்தூரின்போது மத்தியஸ்தம் செய்ததா சீனா? இந்தியா மறுப்பு

    இ-சேவை, ஆதார் சேவை மையங்களுக்கு 2 நாள்கள் விடுமுறை!

    Trending Posts

    தினந்தோறும் போட்டோ ஷூட் நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்.. ஜெயக்குமார் விமர்சனம்

    December 31, 2025

    காங்கிரசில் விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பா? செல்வ பெருந்தகை பதில்

    December 31, 2025

    பழவூர் அருகே மாநில மின்னொளி கபடி போட்டி

    December 31, 2025

    தலைமை காவலரை கத்தியுடன் விரட்டிய இளைஞர்; கோவில் விழாவில் பரபரப்பு

    December 31, 2025

    இ-சேவை, ஆதார் சேவை மையங்களுக்கு 2 நாள்கள் விடுமுறை!

    December 31, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.