Close Menu
    What's Hot

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    கொரிய சுற்றுலாத் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தலைமை காவலரை கத்தியுடன் விரட்டிய இளைஞர்; கோவில் விழாவில் பரபரப்பு
    தமிழ்நாடு

    தலைமை காவலரை கத்தியுடன் விரட்டிய இளைஞர்; கோவில் விழாவில் பரபரப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    attack knife
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நடந்த விழாவில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலரை கத்தியால் குத்த இளைஞர் ஒருவர் பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வைகுண்ட ஏகாதசியான இன்று திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து  ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து சொர்க்க வாசல் வழியாக சென்று வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அங்கு திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் போலீசாருடன் திடீரென கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் தகாத வார்த்தைகளால் அனைவரையும் திட்ட ஆரம்பித்து பிரச்சனை செய்து கொண்டு இருந்தார். இதனால் அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் ராமகிருஷ்ணன் அந்த இளைஞரிடம் விசாரித்துள்ளார்.

    இதனால் கோபம் அடைந்த அந்த இளைஞர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொண்டு தலைமை காவலரை தாக்க முயன்றார். மேலும் தலைமை காவலரை தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு, அவரை குத்துவதற்காக பாய்ந்ததால் கோயிலில் சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சியடைந்து அங்கும் இங்கும் நாலாபுறமும் ஓடினர்.

    இதை சற்றும் எதிர்பாராத தலைமை காவலர் ராமகிருஷ்ணன் தனது பெல்ட்டை கழட்டி வீசியபடி தன்னை தற்காத்துக்கொண்டு கத்தியை கீழே போடுமாறு கூறிக்கொண்டு அவரை மடக்கி பிடிக்க முயன்றார். இதை தொடர்ந்து அங்கு வந்த மற்ற காவலர்கள் இணைந்து கத்தியுடன் பாய்ந்த இளைஞரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் மதுரையை சேர்ந்த இளங்கோ என்பதும், அவர் போதையில் இருந்ததும் தெரிய வந்தது. மேலும் அந்த இளைஞர் கத்தி, மிளகாய்ப்பொடி போன்றவற்றை உடன் எடுத்து வந்திருந்ததால் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசியல் கட்சிகளின் முகவர்கள் தினசரி 10 எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்கலாம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு
    Next Article சாதிவாரி சர்வே நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லையா? அன்புமணி
    Editor TN Talks

    Related Posts

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    June 2, 2026

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: இன்று 22 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’!

    கொரிய சுற்றுலாத் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.