விளையாட்டில் புகுத்தப்படும் இந்த அர்த்தமற்ற அரசியல் நம்மை எங்கே கொண்டு செல்கிறது? ஒரு தனிப்பட்ட விளையாட்டு வீரரை அவரது நாட்டின் அரசியல் சூழ்நிலைக்குப் பொறுப்பாக்குவது முறையல்ல” என்று முஷ்தபிசூர் ரகுமான் நீக்கத்திற்கு சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வங்கதேச வீரர் முஷ்தபிசுர் ரகுமானை விடுவிக்குமாறும் பிசிசிஐ உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து 9.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட முஷ்தபிசுர் ரகுமானை கேகேஆர் அணி விடுவிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கு திருவனநாதபுர காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “பிசிசிஐ, முஷ்தபிசுர் ரகுமானை மிகவும் பரிதாபகரமான முறையில் அணியிலிருந்து நீக்கியுள்ளது.
ஒருவேளை வங்கதேசத்தின் இந்து வீரர்கள், லிட்டன் தாஸ் அல்லது சௌம்யா சர்க்கார் போன்றவர்கள் அணியில் இருந்திருந்தால் பிசிசிஐ என்ன செய்திருக்கும்? என்று கேள்வி எழுப்பிய சசி தரூர், ஒரு நாடு, ஒரு தனிமனிதன், அவரது மதம் – இங்கே நாம் யாரைத் தண்டிக்கிறோம்? விளையாட்டில் புகுத்தப்படும் இந்த அர்த்தமற்ற அரசியல் நம்மை எங்கே கொண்டு செல்கிறது? ஒரு தனிப்பட்ட விளையாட்டு வீரரை அவரது நாட்டின் அரசியல் சூழ்நிலைக்குப் பொறுப்பாக்குவது முறையல்ல” என்று தெரிவித்துள்ளார்.
