Close Menu
    What's Hot

    ICC T20 உலகக் கோப்பை 2026: சரித்திரம் படைத்த ஆஸ்தி., மகளிரணி..!! இங்கிலாந்தை வீழ்த்தி 7வது பட்டம்..!!

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    FIFA World cup 2026: வரலாற்று வெற்றி: பிரேசில் உலகக் கோப்பை கனவை தகர்த்தது நார்வே அணி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தேமுதிக சார்பில் நாளை முதல் விருப்ப மனு விநியோகம்!. பிரேமலதா அறிவிப்பு!
    தமிழ்நாடு

    தேமுதிக சார்பில் நாளை முதல் விருப்ப மனு விநியோகம்!. பிரேமலதா அறிவிப்பு!

    Editor web3By Editor web3February 5, 2026Updated:February 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmdk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேமுதிக சார்பில் நாளை (பிப். 6) முதல் விருப்பமனு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனுக்களை விநியோகித்து நேர்காணல் நடத்தி வருகின்றன. ஏற்கனவே, அதிமுக விருப்பமனு விநியோகத்தை முடித்துவிட்டது. இதேபோல், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் விருப்ப மனு விநியோகத்தை 6-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், விஜயகாந்த் இல்லாமல் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தேமுதிக, இதுவரை கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்தநிலையில், தேமுதிக சார்பில் நாளை (பிப். 6) முதல் விருப்பமனு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி 30 சட்டமன்ற தொகுதியிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் சட்டமன்ற பொதுத்தேர்தல் விருப்ப மனுக்களை 06.02.2026 முதல் 12.02.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 12.02.2026 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தமிழக சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.15 ஆயிரமும், தனித்தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும் புதுச்சேரி சட்டமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும் தனித்தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.5 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகடும் அமளி!. பிரதமர் இல்லாமலேயே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!.
    Next Article எப்ஸ்டீன் ஆவண சர்ச்சை!. மன்னிப்பு கேட்டார் பில் கேட்ஸ்!.
    Editor web3
    • Website

    Related Posts

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    July 5, 2026

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    July 5, 2026

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ICC T20 உலகக் கோப்பை 2026: சரித்திரம் படைத்த ஆஸ்தி., மகளிரணி..!! இங்கிலாந்தை வீழ்த்தி 7வது பட்டம்..!!

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    FIFA World cup 2026: வரலாற்று வெற்றி: பிரேசில் உலகக் கோப்பை கனவை தகர்த்தது நார்வே அணி..!!

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.