Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»“அமெரிக்கா எங்களை டாய்லெட் பேப்பரை  போல பயன்படுத்தி தூக்கி எறிந்துவிட்டது”!. பாக்., அமைச்சர் வேதனை!
    உலகம்

    “அமெரிக்கா எங்களை டாய்லெட் பேப்பரை  போல பயன்படுத்தி தூக்கி எறிந்துவிட்டது”!. பாக்., அமைச்சர் வேதனை!

    Editor web3By Editor web3February 11, 2026Updated:February 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Khawaja Asif
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவுடன் வர்த்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், அமெரிக்கா குறித்து கடுமையாக விமர்சித்துள்ளது.

    அமெரிக்க ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்த டிரம்ப், இந்தியா மீது 25 சதவீத பரஸ்பர வரி விதித்தார். அத்துடன் நிறுத்தாமல் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக கூடுதலாக 25 சதவீத வரி என அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஏற்பாடு செய்வதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு, இந்தியாவுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார். அந்த ஒப்பந்தத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    இந்தநிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், நாடாளுமன்றத்தில் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களில் பாகிஸ்தான் பங்கேற்றது ஒரு மிகப்பெரிய தவறு என்றும், அது மதக் கடமையால் தூண்டப்பட்டது அல்ல, மாறாக அப்போதைய ராணுவ ஆட்சியாளர்கள் ஜியா-உல்-ஹக் மற்றும் முஷாரஃப் அமெரிக்காவின் ஆதரவைப் பெறச் செய்த தந்திரம் என்று விமர்சித்தார்.

    இன்று பாகிஸ்தான் சந்தித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்கள், கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளின் எதிரொலி என்றும் ஆசிப் தெரிவித்தார். இந்தப் போர்களை ஆதரிப்பதற்காக பாகிஸ்தான் தனது கல்விப் பாடத்திட்டத்தில் கூட மாற்றங்களைச் செய்தது, இன்றுவரை அந்த மாற்றங்கள் சரிசெய்யப்படவில்லை என்று அவர் விளக்கினார். 1999 க்குப் பிறகு, அமெரிக்காவின் ஆதரவைப் பெற பாகிஸ்தான் மீண்டும் போரில் இணைந்தது, அதற்காக நாங்கள் அதிக விலை கொடுத்துள்ளோம் என்று கவாஜா ஆசிப் கூறினார்.

    அமெரிக்கா தனது மூலோபாயத் தேவைகளுக்காகப் பாகிஸ்தானைப் பயன்படுத்திக் கொண்டு, பின்னர் டாய்லட் டிஷ்யூ பேப்பர் போல தூக்கி எறிந்துவிட்டதாக சாடினார். இந்த தவறான முடிவு பாகிஸ்தானை மற்றவர்களின் போர்களில் ஒரு பகடைக்காயாக நிலைநிறுத்தியதாக கவாஜா ஆசிப் வேதனை தெரிவித்தார்.  

    கடந்த பிப்ரவரி 6 அன்று, இஸ்லாமாபாத்தின் தர்லாய் பகுதியில் உள்ள ஷியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர் மற்றும் 169 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

    தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியவர் பெஷாவரைச் சேர்ந்த யாசிர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தாக்குதலுக்கு முன்னதாக ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றதாக  கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பயங்கரவாதத்தைக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அமெரிக்காவை விமர்சித்து பேசியுள்ளார். மேலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் பாகுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் என்று கவாஜா ஆசிப் வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநரவனே புத்தகத்தால் பரபரப்பு!. பென்குயின் பதிப்பகத்திற்கு நோட்டீஸ்!. டெல்லி காவல் துறை FIR!.
    Next Article ஆட்சியில் பங்கு இல்லை!. திமுக-காங்., கூட்டணியில் விரிசலா?. செல்வப்பெருந்தகை பதிலடி!
    Editor web3
    • Website

    Related Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026

    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் உயிரிழப்பு!. 6 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு!

    February 15, 2026

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.