Close Menu
    What's Hot

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆட்சியில் பங்கு இல்லை!. திமுக-காங்., கூட்டணியில் விரிசலா?. செல்வப்பெருந்தகை பதிலடி!
    தமிழ்நாடு

    ஆட்சியில் பங்கு இல்லை!. திமுக-காங்., கூட்டணியில் விரிசலா?. செல்வப்பெருந்தகை பதிலடி!

    Editor web3By Editor web3February 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selva 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக காங்கிரஸ் கூட்டணி இடையே பிரச்சனை இருக்குமா விரிசல் வருமா என்று நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.

    சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் கட்சிக்கு ஒரு கருத்து ஒவ்வொரு கட்சிக்கு ஒரு கருத்து. எங்கள் கட்சித் தலைவர்கள் அவர்களுடைய கருத்தை சொல்வார்கள் முதலமைச்சர் அவருடைய கருத்தையும் கட்சியின் கருத்தையும் தமிழ்நாட்டு நாட்டு நடப்பு சொல்லி இருக்கிறார்.

    எல்லாவற்றையும் சேர்த்து அமர்ந்து பேசி எங்கள் அகில இந்திய தலைவர்கள், முதலமைச்சர் பேசி நல்ல முடிவு எடுப்பார்கள் இதில் அவர் இப்படி சொல்லிவிட்டார் இவர் இப்படி சொல்லிவிட்டார் இதனால் கூட்டணிக்குள் பிணக்கு இருக்குமா பிரச்சனை இருக்குமா விரிசல் வருமா என்று நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு வாய்ப்பில்லை என்றார்.

    ஒரு போதும் பாரதிய ஜனதா கட்சியும், அதனுடைய அங்கமாக இருக்கின்ற அதிமுகவையும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.  தமிழ்நாட்டு நலனைத் தமிழ்நாட்டு உரிமைகளை விட்டுக் கொடுத்தவர்கள் தாரைவார்த்துக் கொடுத்தவர்கள் அவர்கள். தமிழ்நாட்டு மக்களை முதுகில் குத்தியவர்கள்.

    தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றியவர்கள். ஒரு வாரத்துக்கு முன்னாள் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டுக்கு என்று ஒரு அறிவிப்பு கூட கிடையாது. இதை யார் கேட்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் சார்பில் நாளைக்கு (12.02.2026) ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறோம். இந்தியா கூட்டணி சார்பாக மதச்சார்பற்ற கூட்டணி சார்பாக தொழிற்சங்கங்கள் எல்லாரும் சேர்ந்து காலை ஒரு ஆர்ப்பாட்டம், மாலை ஒரு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்துள்ளோம்.

    இது குறித்து ஏன் அதிமுக வாயைத் திறக்கவில்லை?. இதெல்லாம் யாரும் கேட்கவில்லையே? தமிழ்நாட்டு நலனில் அக்கறை இல்லாதவர்களான நீங்கள் எப்படி மக்களைப்  பார்க்கப் போகிறீர்கள். எப்படித் தேர்தலைச் சந்திக்கப் போகிறீர்கள். தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு விபரம் இல்லாதவர்களா?. தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டீர்கள். திட்டங்கள் தீட்ட மாட்டீர்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான சிந்தனையில் உள்ளவர்களுக்கு எப்படி வாக்களிப்பார்கள். அதனால்  இந்த தேர்தலைச் சந்திப்பது அரசியல் கட்சிகள் என்பதை விடத் தமிழ்நாட்டைத் தமிழ் மண்ணை பாதுகாக்கும் கூட்டணி. எங்களுடைய கூட்டணி தமிழ்நாடும் மதவாத சக்தி தான் மோதப் போகிறது” எனப் பேசினார்.

    முதல்வர் சொன்னதில் என்ன ஆகிவிட்டது என்ன பிரளயம் ஏற்பட்டு விட்டது என்று கூறிய அவர், 2006 இல் நான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இல்லை. அப்போது யார் இருந்தார்களோ அவர்களிடம் கேட்டால் சரியான விடை கிடைக்கும் என்றார்.

    எல்லோருக்கும் பேச்சுரிமை எழுத்துரிமை இருக்கிறது, கருத்துரிமை இருக்கிறது அவரவர்கள் கருத்தை அவரவர்கள் சொல்கிறார்கள். முடிவெடுக்க வேண்டியவர்கள் எங்கள் அகில இந்திய திறமையும் எங்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதலமைச்சர் சேர்ந்து நல்ல முடிவு எடுப்பார் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“அமெரிக்கா எங்களை டாய்லெட் பேப்பரை  போல பயன்படுத்தி தூக்கி எறிந்துவிட்டது”!. பாக்., அமைச்சர் வேதனை!
    Next Article தேர்தல் எதிரொலி!. நயினார் தலைமையில் பாஜக தேர்தல் மேலாண்மைக் குழு அமைப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.