Close Menu
    What's Hot

    ”ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை…இதற்குத்தான் ‘சிங்கப்பெண்’ படையா முதல்வரே?”

    இன்ஸ்டா மூலம் மலர்ந்த காதல்..!! இளம்பெண்ணை தீர்த்துக்கட்டிய குடும்பம்..!! தூத்துக்குடியில் பயங்கரம்..!!

    ஜூன் 24-இல் கூடுகிறது சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்!. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாங்குநேரி இரட்டை கொலை!. ஏற்க முடியாத பெருங்குற்றம்!. எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
    தமிழ்நாடு

    நாங்குநேரி இரட்டை கொலை!. ஏற்க முடியாத பெருங்குற்றம்!. எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

    Editor web3By Editor web3March 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில், “நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்தில் அரங்கேறியுள்ள கொடூரம் ஏற்க முடியாத பெருங்குற்றம்.

    பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் அந்த கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்து, 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய திமுக அரசின் அலட்சிய போக்கின் விளைவு தான் இந்த கொடூரக் கொலைகள்.

    இது தங்கள் சமூகத்தைக் குறிவைத்து நடந்த தாக்குதல் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அச்சத்துடன் போராடி வருகின்றனர் அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள்.

    இதே நாங்குநேரி தொடங்கி, தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு? வேடிக்கை மட்டும் தானே பார்த்துக்கொண்டு இருந்தது?

    தொடர்ந்து இப்பகுதியை பதற்ற நிலையிலேயே வைத்திருக்க வேண்டுமென்பது தான் திமுக அரசின் எண்ணமா? தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை வளர்த்து விடுகிறதா திமுக? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மக்களிடையே எழுகிறது. மேடைகளில் சமத்துவம் என்று பேசும் திமுக, தனது ஆட்சியில் சமூக மோதல்களைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    பெரும்பட்டு தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாங்குநேரியில் இரட்டைக்கொலை… பயத்தோடு வாழும் பட்டியலின மக்கள்?
    Next Article திமுக கெடு!. சோனியா, ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடம் அவசர ஆலோசனை!
    Editor web3
    • Website

    Related Posts

    ”ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை…இதற்குத்தான் ‘சிங்கப்பெண்’ படையா முதல்வரே?”

    June 11, 2026

    இன்ஸ்டா மூலம் மலர்ந்த காதல்..!! இளம்பெண்ணை தீர்த்துக்கட்டிய குடும்பம்..!! தூத்துக்குடியில் பயங்கரம்..!!

    June 11, 2026

    ஜூன் 24-இல் கூடுகிறது சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்!. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!.

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை…இதற்குத்தான் ‘சிங்கப்பெண்’ படையா முதல்வரே?”

    இன்ஸ்டா மூலம் மலர்ந்த காதல்..!! இளம்பெண்ணை தீர்த்துக்கட்டிய குடும்பம்..!! தூத்துக்குடியில் பயங்கரம்..!!

    ஜூன் 24-இல் கூடுகிறது சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம்!. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!.

    மம்தா பானர்ஜிக்கு அடி மேல் அடி..!! மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ராஜினாமா..!!

    திமுக கூட்டணியில் இருந்து விலகல்..!! இந்திய கம்யூனிஸ்டு கட்சி அதிரடி அறிவிப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.