Close Menu
    What's Hot

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»5 மாநில தேர்தல் தேதி எப்போது வெளியாகும் தெரியுமா?. வெளியான புது தகவல்!
    தமிழ்நாடு

    5 மாநில தேர்தல் தேதி எப்போது வெளியாகும் தெரியுமா?. வெளியான புது தகவல்!

    Editor web3By Editor web3March 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    election date update
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 10 தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதியை எதிர்பார்த்து ஒட்டுமொத்த வாக்காளர்களும் அரசியல் கட்சிகளும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு தனது இறுதிக்கட்ட ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளது. மார்ச் 10-ம் தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் தமிழகத்திற்கான தேர்தல் அட்டவணை வெளியாகலாம் எனத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தேர்தல் ஆணையத்தின் பயணத் திட்டத்தின்படி, நாளை மறுநாள் (மார்ச் 5) கேரளா செல்லும் ஆய்வுக் குழுவினர், அங்கு மார்ச் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் விரிவான ஆலோசனைகளை நடத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து, மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஏற்கனவே தமிழ்நாடு, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆய்வுகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளா மற்றும் மேற்கு வங்கப் பயணத்திற்குப் பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வழக்கமாக, தேர்தல் ஆணையம் அனைத்துப் மாநிலங்களிலும் தனது கள ஆய்வுகளை முடித்த சில நாட்களிலேயே டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துத் தேர்தல் தேதியை அறிவிக்கும். அந்த வகையில், மார்ச் 10-ம் தேதி இரவு அல்லது மார்ச் 11-ம் தேதிகளில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரும் என்பதால், தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பில் காணப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஹெல்மெட்டை தூக்கியெறிந்த விவகாரம்!. சஞ்சு சாம்சனுக்கு தடை?. ரசிகர்கள் அதிர்ச்சி!
    Next Article மீண்டும் எம்.பி. ஆகும் தம்பிதுரை?. அப்போ இன்னொரு சீட் யாருக்கு?. அதிமுக பிளான் என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    June 10, 2026

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    June 10, 2026

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    தவெக-வில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்!. நீதிமன்றத்தில் புதிய வழக்கு!

    காற்றில் கலந்தார் ‘இயக்குநர் இமயம்’..!! நடிகர் யோகிபாபு உருக்கமான இரங்கல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.