Close Menu
    What's Hot

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஆண்டது போதும்; மாண்டது போதும்!. கடைசி நாளில் ஆவது நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்?. இபிஎஸ் கண்டனம்!
    தமிழ்நாடு

    ஆண்டது போதும்; மாண்டது போதும்!. கடைசி நாளில் ஆவது நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்?. இபிஎஸ் கண்டனம்!

    Editor web3By Editor web3March 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆட்சியின் கடைசி நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவில், நேற்றைய தினம் பவானி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில், கடந்த 48 மணி நேரங்களில் நடைபெற்ற பல்வேறு சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தான செய்திகளைப் பட்டியலிட்டு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டதை சுட்டிக்காட்டினேன்.
    இன்றைய தினம் (தற்போது வரை) செய்திகளில் வந்துள்ள “கொலை நிலவரத்தை” சுட்டிக்காட்ட விழைகிறேன். -கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, முதியவர் கொலை செய்யப்பட்டு, மூதாட்டி மனைவிக்கு பாலியல் வன்கொடுமை-சென்னை திரிசூலத்தில் குடிசையில் தங்கியிருந்த இருவர் படுகொலை -தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விவசாயி படுகொலை இப்படி தொடர்ச்சியாக வரும் கொலை செய்திகள், பாலியல் குற்றச் செய்திகள் மக்களிடையே அச்ச உணர்வை அதிகரித்துள்ளது. முதியோருக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என்பது எவ்வளவு கொடூரமான நிலை? இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய  முதல்வர், கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறையாவது சட்டம் ஒழுங்கைப் பற்றி வாய் திறந்து பேசியுள்ளாரா?
    தென்காசி விவசாயி கொலையில், காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்பட்டது என உயிரிழந்த விவசாயியின் மகன் தெரிவித்துள்ளார். குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதை காவல்துறை தடுக்காமல் இருந்ததை எப்படி திரு. மு.க. ஸ்டாலின்  நியாயப்படுத்த முடியும்?
    ஸ்டாலின் அவர்களே- உங்கள் ஆட்சியில் “அங்கொன்றும் இங்கொன்றுமாக” கொலைகள் நடக்கவில்லை. “எங்கும் கொலை, எப்போதும் கொலை” தான் நடக்கிறது. நீங்கள் ஆண்டது போதும்; மக்கள் மாண்டது போதும்!
    மேற்கூறிய வழக்குகளில் குற்றம் இழைத்தோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன். தனது ஆட்சியின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் திமுக அரசு, இருக்கும் கொஞ்ச நாட்களிலாவது சட்டம் ஒழுங்கைக் காக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரே ஆண்டில் 46 புதிய கோடீஸ்வரர்கள்!. ஹுருன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் AI ஆதிக்கம்!
    Next Article ராஜ்யசபா தேர்தல்!. தமிழகத்தின் 6 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!.
    Editor web3
    • Website

    Related Posts

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    July 5, 2026

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    July 5, 2026

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.