சென்னை மாதவரம் ரவுண்டானா பகுதியில் அதிகாலையில் நடந்த என்கவுண்டரில் பிரபல ரவுடி தொப்பை கணேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கடந்த ஜனவரி 30ம் தேதி புழல் நீலகண்டநகர் பகுதியில் வசிக்கும் பொறியாளர் விஜயகுமார் வீட்டில் ரூ.25 லட்சம் பணம், 15 சவரன் நகை கொள்ளை தொடர்பான வழக்கில், கைது செய்ய முயன்றபோது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்றபோது சுடப்பட்டதில் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொப்பை கணேஷ் மீது கொலை, கொள்ளை, வழிபறி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவில் இடம்பெற்றுள்ள குற்றவாளி என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் இருந்து பல்வேறு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்களை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
