Close Menu
    What's Hot

    நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம்..!! தவெக அரசை சாடிய நயினார்..!!

    கூடுதல் கட்டணம் வசூலிப்பு; தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசு எச்சரிக்கை!

    இன்று சமூக ஊடக தினம்;  சமூக ஊடகங்களை கவனமுடன் கையாள்வோம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026!. பணப்பட்டுவாடாவைத் தடுக்க ட்ரோன் கண்காணிப்பு!.
    தமிழ்நாடு

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026!. பணப்பட்டுவாடாவைத் தடுக்க ட்ரோன் கண்காணிப்பு!.

    Editor web3By Editor web3April 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Drone Surveillance
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலைச் சிறப்பாக நடத்தி முடிக்க அரசு தரப்பில் ரூ.1032 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து, மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.727 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.126 கோடி ரொக்கம், ரூ.295 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், ரூ.75 கோடி மதிப்பிலான போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் அடங்கும். உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்களிடம் ரூ.265 கோடி மதிப்பிலான பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 1.40 லட்சம் காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதவிர, 299 துணை ராணுவ கம்பெனிகள் பாதுகாப்புப் பணியில் இணையவுள்ளன; இதில் 115 கம்பெனிகள் ஏற்கனவே தமிழகம் வந்துவிட்டன.

    தபால் வாக்கைப் பொறுத்தவரை, 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என சுமார் 1.90 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.

    இதுவரை 15,000 பேர் தபால் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.

    தேர்தல் பணியில் உள்ள 1.5 லட்சம் அலுவலர்கள் படிவம் 12D மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்.

    தமிழகம் முழுவதும் மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5,938 இடங்கள் பதற்றமானவை எனத் தரம் பிரிக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் அமைதியாக நடைபெற ஏதுவாக, வரும் ஏப்ரல் 21 முதல் 23-ஆம் தேதி நள்ளிரவு வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் பெயரையும் பூத் விவரங்களையும் அறிய 1950 என்ற எண்ணிற்கு ‘EPIC’ எண்ணுடன் குறுஞ்செய்தி அனுப்பி உறுதி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைச்சர் சேகர்பாபு மகன்கள் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!. சென்னையில் பரபரப்பு!
    Next Article 21ம் நூற்றாண்டின் முக்கிய முடிவுகளில் ஒன்று மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா!. பிரதமர்  மோடி!.
    Editor web3
    • Website

    Related Posts

    நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம்..!! தவெக அரசை சாடிய நயினார்..!!

    June 30, 2026

    கூடுதல் கட்டணம் வசூலிப்பு; தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசு எச்சரிக்கை!

    June 30, 2026

    இன்று சமூக ஊடக தினம்;  சமூக ஊடகங்களை கவனமுடன் கையாள்வோம்!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம்..!! தவெக அரசை சாடிய நயினார்..!!

    கூடுதல் கட்டணம் வசூலிப்பு; தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அரசு எச்சரிக்கை!

    இன்று சமூக ஊடக தினம்;  சமூக ஊடகங்களை கவனமுடன் கையாள்வோம்!

    7 இல்ல..!! 12 தொகுதிகளை குறிவைத்த தவெக..!! இடைத்தேர்தல் கணக்கால் கலங்கும் அறிவாலயம்..!!

    பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு ரூ.5 இலட்சம் போதைப் பொருட்கள் கடத்தல் –  4 பேர் கைது; 2 சொகுசு கார்கள் பறிமுதல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.