Close Menu
    What's Hot

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»பார் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் – பேரறிவாளனுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி போர்க்கொடி
    Featured

    பார் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் – பேரறிவாளனுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி போர்க்கொடி

    Editor TN TalksBy Editor TN TalksApril 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 peravivalan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வழக்கறிஞராக பதிவு செய்துள்ள பேரறிவாளனை பார் கவுன்சிலில் இருந்து நீக்கவேண்டும் என காங்கிரஸ் எம்.பி சுதா எதிர்ப்புதெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்பட 7 பேர் நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பின்னர்  உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

    சிறையில் இருந்து வெளியில் வந்த பேரறிவாளன் வழக்கறிஞர் தொழிலை தேர்வு செய்து, கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள சட்டக்கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். கடந்த 27ஆம் தேதி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
    இந்த நிலையில், பேரறிவாளனை பார் கவுன்சிலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா ஜனாதிபதி, பிரதமர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, மத்திய சட்டத்துறை மந்திரி மற்றும் தமிழக முதல்-அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    பேரறிவாளன் ஐகோர்ட்டு வளாகத்திற்குள் நுழைவதை வழக்கறிஞராக தான் அனுமதிக்க மாட்டேன் எனவும் சுதா எம்.பி தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான பேரறிவாளன், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். அவர் கருணை மனு மூலமாகவே விடுதலை பெற்றுள்ளார்

    பேரறிவாளனை பார் கவுன்சிலில் பதிவு செய்தது இந்திய நீதித்துறையின் கருப்பு நாளாகும். அவரை பார் கவுன்சிலில் இருந்து உடனடியாக நீக்கவும்,  அவர் பதிவு செய்ய உதவிய அனைவரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுதா எம்.பி தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜக சின்னம் மறைப்பு!. மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு!. தேர்தல் ஆணையம் அதிரடி!
    Next Article மலைக்கோட்டை கோவில் சித்திரை தேரோட்டம் – சிவ மந்திரங்கள் முழங்க பக்தர்கள் பரவசம்
    Editor TN Talks

    Related Posts

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    May 1, 2026

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    May 1, 2026

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    May 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

    மே 7ம் தேதி வரை பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    கொத்தடிமை வழக்குகளில் விரைவான தண்டனை: தமிழ்நாடு அரசுக்கு IJM பாராட்டுக் கடிதம்!

    மதுபோதையில் அவைக்கு வந்த முதலமைச்சர்..! எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு..!

    திருமண இசையால் பறிப்போன 140 உயிர்..! லக்னோவில் நடந்த சோகம்..!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.