ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய பொழுது டாட்டா ஏஸ் வாகனம் தலைகுப்புற கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்,15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
வாகைகுளம் என்ற இடத்தில் மதுரை – ராமநாதபுரம் நான்கு வழி சாலையில் சென்ற டாட்டா ஏஸ் வாகனம் மீது சரக்கு ஏற்றி வந்த லாரி மோதியது. இதனால் டாடா ஏஸ் வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பரமக்குடி சந்தை கடை பகுதியை சேர்ந்த பூபதி (வயது 50) என்ற பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஆண், பெண் உள்பட 15பேர் படுகாயமடைந்து பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகைக் குளம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் இறந்து அவரது உடல் பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு துக்கம் விசாரிப்பதற்காகச் சென்றவர்கள்தான் துக்கம் விசாரித்துவிட்டு வரும்போது விபத்தில் சிக்கியுள்ளனர். இதுகுறித்து பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
