Close Menu
    What's Hot

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»அரசியல்»”யாரையும் புண்படுத்தாதீர்…” – திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை!
    அரசியல்

    ”யாரையும் புண்படுத்தாதீர்…” – திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை!

    Editor web1By Editor web1May 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    paramakudi stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டின் அரசியல் களம் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், தமிழக வெற்றி கழகம் தலைமையில் உருவான புதிய அரசில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

    சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தவெக தலைமையில் அமைந்த கூட்டணி அரசு, இப்போது இந்த இரு கட்சிகளின் ஆதரவுடன் வலுவான அடித்தளத்தைப் பெற்றுள்ளது. விசிக சார்பில் வன்னி அரசு சமூக நீதி, ஆதி திராவிடர் நலன் மற்றும் மலைவாழ் மக்கள் நலத் துறை ஆகிய முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். அதேபோல், ஐயூஎம்எல் சார்பில் ஏ.எம். ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த இணைப்பு, தவெக அரசுக்கு கூடுதல் வலு சேர்க்கும் நடவடிக்கையாக அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன.

    இந்த நிலையில், தவெக அமைச்சரவையில் விசிகவும், ஐயுஎம்எல் கட்சியும் இடம்பெற்றதை திமுகவின் ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாகத் தாக்கி பதிவிட்டார்.

    ஆ.ராசா தனது பதிவில்,

    ”முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’

    மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’

    வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு

    முட்டுக் கொடுக்குமென்றால்;

    பூ முடித்தவனை புறந்தள்ளி —

    புணர்ச்சிக்கு வேறிடம்

    தேடுவதில் தவறில்லை!

    பெரியாரின்

    ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு

    காத்திருப்போம் ;  என்றாலும்

    களமாடுவோம் !

    வெற்றி நமக்கே!!” என்று காட்டமாக விமர்சித்தார்.

    இதற்கு விசிக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, ஆ. ராசா தனது இந்தப் பதிவை நீக்கினார்.

    இந்நிலையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், இந்த நடவடிக்கையை வரவேற்று வன்னி அரசு மற்றும் ஏ.எம். ஷாஜஹான் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனது சொந்த முடிவுகளை எடுக்கும் முழு உரிமை உண்டு என்பதை அடிப்படையாகக் கொண்டு, திமுக தொண்டர்கள் யாரையும் மனதளவில் புண்படுத்தும் வகையில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்.

    “பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம்” என்று நினைவூட்டிய அவர், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டும் என்று திமுகவினருக்கு அறிவுறுத்தியுள்ளார். எந்தக் கட்சிக்கும் தனது அரசியல் பாதையைத் தேர்வு செய்யும் உரிமை இருப்பதால், இந்த நேரத்தில் உணர்ச்சிவசப்படாமல், அமைதியான முறையில் செயல்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஆறாத வடு… இன்னமும் கிடைக்காத நீதி!
    Next Article எபோலா அச்சுறுத்தல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!
    Editor web1
    • Website

    Related Posts

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    June 15, 2026

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    June 15, 2026

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.