Close Menu
    What's Hot

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»3 பேர் ராஜினாமா.. தவெகவில் 100% குதிரை பேரம்..!! இன்பதுரை பகீர் குற்றச்சாட்டு..!!
    Featured

    3 பேர் ராஜினாமா.. தவெகவில் 100% குதிரை பேரம்..!! இன்பதுரை பகீர் குற்றச்சாட்டு..!!

    editor5By editor5May 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 19
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    3 பேர் தவெகவில் இணைந்த நிலையில் நடந்திருப்பது 100 சதவீதம் குதிரை பேரம் நடந்துள்ளது என்று இன்பதுரை தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 233 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 107 இடங்களில் வெற்றி பெற்றது. திருச்சி கிழக்கு தொகுதியைத் தவிர்த்து இந்த வெற்றிக் கணக்கு பதிவாகியுள்ளது. ஆனால், 118 உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்தை எட்டாததால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தவெக, திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடியது.

    இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி விலகி தவெகவுடன் கூட்டணி சேர்ந்தது. இதன் பலனாக காங்கிரஸ் இரண்டு அமைச்சர் பதவிகளைப் பெற்றது. அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கழகம் (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளும் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்.) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) ஆகியவை வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவை அளித்து தவெக அரசை பலப்படுத்தின.

    இதற்கிடையில், அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் தலைமையில் சுமார் 25 எம்எல்ஏக்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். இது அதிமுகவில் பிளவு ஏற்படும் சந்தேகத்தை எழுப்பியது. எனினும், இந்த அணியினர் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்புடன் சமாதானப் பேச்சுகள் நடைபெறும் எனும் தகவல்கள் வெளியான நிலையில், எஸ்.பி. வேலுமணி அணியைச் சேர்ந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூன்று எம்எல்ஏக்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

    இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து மூவரும் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்தனர். அவர்களின் ராஜினாமாக்கள் ஏற்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும் அதிமுக எம்பியுமான இன்பதுரை தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். “சபாநாயகர் ராஜினாமாவை ஏற்பதற்கு முன்பே அந்த மூவரும் அவசர அவசரமாக தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனை சந்தித்தனர். உடனடியாக அவர்களை கட்சியில் இணைத்து உறுப்பினர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட 100 சதவீத குதிரைப் பேரம்” என அவர் குற்றம் சாட்டினார்.

    இந்த சம்பவங்கள் தமிழ்நாடு அரசியலில் புதிய கூட்டணி மாற்றங்கள் மற்றும் அதிமுகவின் உள்ளடி பிரச்னைகளை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன. தவெக அரசு தனது பெரும்பான்மையை உறுதிப்படுத்த மேலும் முயற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடிகரும், இயக்குநருமான சேரனின் தாயார் காலமானார்..!! திரையுலகம் இரங்கல்..!!
    Next Article காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்கு தவெக துரோகமா? – டிடிவி தினகரன் அறிக்கை
    editor5

    Related Posts

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    July 22, 2026

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    July 22, 2026

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    எல்லாம் முடிந்துவிட்டது; இனி அமைதியாக உட்கார்ந்து கை தட்ட வேண்டியதுதான்!. சஞ்சு சாம்சன் பரபரப்பு பேட்டி!

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுகிறது..!! ராகுல் கைதுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.