Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»மெட்டு மட்டும் தான் உங்களுடையது..! வரிகள் இல்லை..! இளையராஜாவை வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றம்..!
    சினிமா

    மெட்டு மட்டும் தான் உங்களுடையது..! வரிகள் இல்லை..! இளையராஜாவை வெளுத்து வாங்கிய உயர்நீதிமன்றம்..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தற்போது வரக்கூடிய படங்களில், எங்காவது ஓரிடத்தில் இளையராஜாவின் பாடல்களின் வரி வந்தாலோ, அல்லது இசை வந்தாலோ உடனே அந்த படக்குழுவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் இளையராஜா. அந்த வகையில் ’மூடுபனி’ என்ற படத்தில் இடம்பெற்ற ’என் இனிய பொன்நிலாவே’ என்ற பாடல், ’அகத்தியா’ என்ற புதிய தமிழ்ப்படத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரிகம இண்டியா லிமிடெட் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த பாடலின் காப்பிரைட் உரிமை தங்களிடம் இருப்பதாக தெரிவித்தது. ஆனால் அகத்தியா பட தயாரிப்பு நிறுவனம், தாங்கள் பாடலின் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் உரிமம் பெற்றிருப்பதாக தெரிவித்தது. இளையராஜாவும் காப்பிரைட் சட்டப்படி தனக்கு உரிமம் வழங்க அதிகாரம் இருப்பதாக கூறினார்.

    ஆனால் அவரது வார்த்தையை ஏற்க மறுத்த நீதிமன்ற, பாடலின் ஒலிப்பதிவின் ஒரு அங்கமான பாடல் வரிகளுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என்று அவரது மனுவை தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் இளையராஜா மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,

    அப்போது, இளையராஜாவின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதுகுறித்து நீதிபதி கூறும்போது,”காப்பிரைட் சட்டத்தின் 2(பி) பிரிவின்படி, இசைப்பணி என்பதில் பாடல் வரியோ அல்லது ஒலிப்பதிவோ வராது. அதில், ஒரு பாடலின் இசைக் கோர்வை மட்டுமே அடங்கும். எனவே, என் இனிய பொன்நிலாவே பாடலின் இசையமைப்பாளரான இளையராஜா, அந்த பாடலின் ஒலிப்பதிவுக்கோ, பாடல் வரிகளுக்கோ உரிமை கோர முடியாது.

    மூடுபடி படத்தின் காப்பிரைட் உரிமை, அதன் தயாரிப்பாளரிடம் உள்ளது. அவர் முறையாக ‘சரிகம’ நிறுவனத்துக்கு உரிமை அளித்துள்ளார்.” என நீதிபதிகள் கூறினர். பாடலின் காப்புரிமை தொடர்பான வழக்கில், நீதியின் தீர்ப்பை எதிர்த்து இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.ஹரி சங்கர் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா அமர்வு, “முந்தைய தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை, மெட்டுக்கு மட்டும் தான் உரிமை.. வரிகளுக்கு இல்லை..

    இப்பாடலின் மெட்டிற்கு மட்டுமே இளையராஜா உரிமை கோர முடியும் என்றும், அதன் வரிகள் மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றின் மீது “சரிகம” நிறுவனத்திற்கே முழு காப்புரிமை உள்ளது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை : நெருங்கிய பக்ரீத் பண்டிகை..! 5,000 இஸ்லாமியர்கள் ஒரே நேரத்தில் சிறப்பு தொழுகை..!
    Next Article பணப்பரிமாற்ற மோசடி வழக்கு: கேரள முன்னாள் முதல்வர் வீட்டில் ED அதிரடி ரெய்டு..!!
    Editor TN Talks

    Related Posts

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    May 30, 2026

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.