Close Menu
    What's Hot

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று!. கேரளாவில் அதிர்ச்சி!

    ஒரே உலகக்கோப்பையில் இரு பெரும் விருதுகள்: வரலாறு படைப்பாரா மெஸ்ஸி?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எந்த பொருளாதார மேதை ஐடியாவோ? – பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து ஓ.எஸ்.மணியன் கமெண்ட்
    Featured

    எந்த பொருளாதார மேதை ஐடியாவோ? – பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து ஓ.எஸ்.மணியன் கமெண்ட்

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 vijay osmaniyan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி எந்த பொருளாதார மேதை கொடுத்த ஐடியாவோ என அதிமுக எம்.எல்.ஏ ஓ.எஸ்.மணியன் கமெண்ட் அடித்துள்ளார்.

    மே 25ஆம் தேதி, முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் குறு, சிறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக ரூ.50ஆயிரமும் குறைந்த பட்சமாக ரூ.5ஆயிரமும் குறு மற்றும் சிறுவிவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் வரவேற்பை கொண்டு வருவதற்குப் பதிலாக அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    தனது தேர்தல் அறிக்கையில் சிறுகுறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துவிட்டு இப்போது கண் துடைப்பு வேலை பார்த்திருப்பதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்ததோடு, இந்த தள்ளுபடியே தேவையில்லை என்னும் அளவுக்கு பேசுபொருளானது.

    முதலமைச்சரின் அறிவிப்புக்கு அரசியல் கட்சியினரும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ ஓ.எஸ்.மணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது,  தனது பங்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தவெக தேர்தல் அறிக்கையில் விவசாயக் கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் எனக் கூறிவிட்டு,  தற்பொழுது இவ்வாறு அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

    எந்த பொருளாதார மேதையிடம் முதலமைச்சர் இந்த ஆலோசனையைக் கேட்டார் என கமெண்ட் செய்தவர்,  இந்த நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத ஒரு மோசமான அறிவிப்பு இது எனவும் சாடினார்.

    தேர்தல் வாக்குறுதியில் கூறியதை சொன்னபடி நிறைவேற்ற வேண்டாமா?.

    அதைத்தானே விவசாயிகள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அதை நிறைவேற்ற வில்லை எனக் கூறியவர், ஜூ ன் 30-ம் தேதிக்குள் விவசாய கடன்கள் செலுத்தப்பட வேண்டும், அப்போதுதான் புதிய கடன் பெற முடியும் அதனால் பயிர்க்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

    வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் அரசின் நடவடிக்கை உள்ளதாக வேதனை தெரிவித்தவரிடம், அதிமுகவில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டதா? என செய்தியாளர்கள் கேட்க, அதற்குப் பதில் அளிக்காமல் நழுவிச் சென்றார் ஓ.எஸ்.மணியன்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ.200 கோடியை நெருங்கும் ‘திரிஷ்யம் 3’: 6 நாட்களில் வசூல் சாதனை!
    Next Article மத்திய நிதியமைச்சருடன் முதல்வர் விஜய் சந்திப்பு: உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி வழங்க கோரிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    July 16, 2026

    உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று!. கேரளாவில் அதிர்ச்சி!

    July 16, 2026

    ஒரே உலகக்கோப்பையில் இரு பெரும் விருதுகள்: வரலாறு படைப்பாரா மெஸ்ஸி?

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட 3 பேருக்கு ஷிகெல்லா தொற்று!. கேரளாவில் அதிர்ச்சி!

    ஒரே உலகக்கோப்பையில் இரு பெரும் விருதுகள்: வரலாறு படைப்பாரா மெஸ்ஸி?

    குழந்தைகள் நலக் காப்பகத்தில் பயங்கர தீவிபத்து!. 11 பேர் பலி!. அல்ஜீரியாவில் பெரும் சோகம்! 

    2 மாதங்களாக சம்பளம் இல்லை; Childline பணியாளர்களின் வாழ்வாதாரத்தை  பாதுகாத்திடுக!. உதயநிதி ஸ்டாலின்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.