Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா பரிந்துரை!
    இந்தியா

    உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனா பரிந்துரை!

    Editor web1By Editor web1May 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    SC
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா அவர்களை நியமிக்க உச்சநீ திமன்றக் கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

    இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான கொலீஜியம், மே 22 மற்றும் மே 27 ஆகிய தேதிகளில் நடைபெற்ற கூட்டங்களில், நான்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர் வி. மோகனா ஆகிய ஐவரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வு செய்யப் பரிந்துரைத்துள்ளது.

    WhatsApp Image 2026 05 27 at 9.49.37 PM

    வழக்கறிஞர் பணியில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள மிகச் சிலரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், முன்னாள் நீதிபதி இந்து மல்கோத்ராவுக்குப் பிறகு, வழக்கறிஞர் பணியில் இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்கும் இரண்டாவது பெண்மணி எனும் பெருமையை வி. மோகனா பெறுவார்.

    கோயம்புத்தூரைச் சேர்ந்த வி.மோகனா, பல ஆண்டுகளாக அரசியலமைப்புச் சட்டம், சிவில் மற்றும் சேவை சார்ந்த வழக்குகளில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். பல்வேறு முக்கிய வழக்குகளில் திறம்பட வாதாடியுள்ளார். ஏற்கெனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர். பானுமதி அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இப்போது வி.மோகனாவின் இந்தப் பரிந்துரை, உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வலுவான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

    தற்போது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டுமே பெண் நீதிபதியாக உள்ளார். வி. மோகனாவின் நியமனம் உச்ச நீதிமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் அதிகரிக்கும். அண்மையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-ல் இருந்து 38 ஆக உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு புதிய சீருடை அறிமுகம்!
    Next Article புதுச்சேரி : உற்சாகத்துடன் பக்ரீத் கொண்டாடிய இஸ்லாமியர்கள்..! 100-க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை..!
    Editor web1
    • Website

    Related Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026

    விவசாய கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய பரிசீலனை  – நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

    May 30, 2026

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.