Close Menu
    What's Hot

    தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை!. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

    மனைவி குழந்தைகள் கண்முன்னே மர்டர்; உறவினர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

    நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு!. முதலமைச்சர் விஜய் இரங்கல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»இரத்தக்களரியில் முடிந்த சொத்து விவகாரம்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை..!! கர்நாடகாவில் பயங்கரம்..!!
    Featured

    இரத்தக்களரியில் முடிந்த சொத்து விவகாரம்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை..!! கர்நாடகாவில் பயங்கரம்..!!

    editor5By editor5May 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 22 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை வெட்டிக்கொலை செய்த கொடூர சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.

    கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் சடச்சனா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிந்தாப்புரா கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த சொத்துப் பிரச்சினை இரத்தக்களரியில் முடிந்துள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த அப்பு கவுடா மற்றும் ரேவணசித்தப்பா ஆகிய இரு குடும்பங்களுக்கும் இடையே சுமார் 10 ஏக்கர் நிலத்துக்காக பல ஆண்டுகளாக கடும் மோதல் நீடித்து வந்தது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் ஊர் பெரியவர்கள் ஏற்பாடு செய்த பஞ்சாயத்தில் பங்கேற்க இரு தரப்பினரும் நேற்று முன்தினம் கிராமத்துக்கு வந்தனர்.

    பஞ்சாயத்தில் பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில், அப்பு கவுடா தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை ரேவணசித்தப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் படிப்படியாக கைகலப்பாக மாறியது. இந்தச் சமயத்தில் அப்பு கவுடா மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி தயாராக வைத்திருந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதலைத் தொடங்கினர்.

    அரிவாள்கள், கத்திகள் மற்றும் துப்பாக்கிகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதலில் ரேவணசித்தப்பா தரப்பைச் சேர்ந்தவர்கள் பலியாகினர். கொல்லப்பட்டவர்களில் துண்டப்பா (65), சிவபுத்ரா (58), சந்திரகாந்த் (55), சிவபுத்ராவின் மகன்கள் ராகுல் (25), சமர்த் (23) ஆகியோர் அடங்குவர். மேலும் அவர்களது தோட்ட வேலைக்காரரான சபீர் பாபுசாப் (45) என மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதலில் இருந்து தப்ப முயன்ற அரவிந்த் யஷ்வந்த் (72) மற்றும் சந்தீப் பாரத் மானே (33) ஆகிய இருவரும் அரிவாள் வெட்டு மற்றும் துப்பாக்கிக் குண்டுகளால் படுகாயமடைந்தனர்.

    அவர்கள் தற்போது விஜயாப்புரா மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு அப்பு கவுடா மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து சடச்சனா போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அப்பு கவுடா தரப்பைச் சேர்ந்த சசிகாந்த், பிரசாந்த், ரமேஷ், சங்கப்பா, மகாதேவா ஆகிய ஐந்து பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கிராமத்தில் இன்னும் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகால சொத்து விவகாரம் இவ்வளவு பயங்கரமான வன்முறையில் முடிவடைந்தது கிராம மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் 99% நிறைவு!. செர்ஜியோ கோர் அதிரடி!
    Next Article ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்!. முதலிடத்தில் யார் தெரியுமா?
    editor5

    Related Posts

    நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு!. முதலமைச்சர் விஜய் இரங்கல்!

    May 30, 2026

    வாக்களித்த மக்களுக்காக.. ஜூன் 1ம் தேதி திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்..!!

    May 30, 2026

    திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு..!! கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி பக்தர்கள் மயக்கம்..!!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை!. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

    மனைவி குழந்தைகள் கண்முன்னே மர்டர்; உறவினர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

    நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு!. முதலமைச்சர் விஜய் இரங்கல்!

    வாக்களித்த மக்களுக்காக.. ஜூன் 1ம் தேதி திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்..!!

    திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு..!! கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி பக்தர்கள் மயக்கம்..!!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026

    ரூ.9 கோடி மதிப்பிலான மேம்பாலம் வீண்!. 7 கி.மீ இணைப்பு சாலைக்காக காத்திருக்கும் கிராம மக்கள்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.