Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured» ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ சர்ச்சை!. மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடருங்கள்!. ஐகோர்ட் அதிரடி! 
    Featured

     ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ சர்ச்சை!. மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடருங்கள்!. ஐகோர்ட் அதிரடி! 

    Editor web3By Editor web3June 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    hindutamil prod 2025 12 11 ix9sae2q Chennai High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கைக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மே 10-ஆம் தேதி, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் மற்றும் அவரது அமைச்சரவை பொறுப்பேற்கும் விழா நடைபெற்றது. இந்த அரசு விழாவில், வழக்கத்திற்கு மாறாக முதலாவதாக ‘வந்தே மாதரம்’ பாடலும், இரண்டாவதாக ‘தேசிய கீதமும்’ பாடப்பட்டு, அதன்பின்னரே மூன்றாவதாக ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ இசைக்கப்பட்டது. பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் இந்த மரபு மாற்றப்பட்டது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது.

    இந்த மரபு மீறலுக்கு எதிராக, சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அவரது மனுவில், கடந்த 1891-ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்ட ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாடலைக்கொண்டே தமிழக அரசு விழாக்கள் தொடங்குவதும், ‘தேசிய கீதத்துடன்’ நிறைவடைவதும் காலங்காலமாகப் பின்பற்றப்படும் மரபாகும்.

    தற்போதைய புதிய நடைமுறை இந்த மரபைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்த் தாய் வாழ்த்து என்பது வெறும் சடங்கல்ல; அது தமிழர்களின் பண்பாடு, உணர்வு மற்றும் அடையாளத்தின் குறியீடு.

    அரசு விழாக்களின் தொடக்கத்தில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும் என கடந்த ஜனவரி 28 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. எனினும், மாநிலப் பாடல்களைப் பாட அது தடை விதிக்கவில்லை.

    இத்தகைய கலாச்சார முரண்பாடுகளைத் தவிர்க்க, வருங்கால அரசு விழாக்களில் ‘தமிழ்த் தாய் வாழ்த்துக்கே’ முதலிடம் வழங்க உரிய நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கு வந்தே மாதரத்திற்கோ அல்லது தேசிய கீதத்திற்கோ எதிரானது அல்ல என்றும் மனுதாரர் தெளிவுபடுத்தியுள்ளார்.

    இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “மத்திய அரசின் இந்தச் சுற்றறிக்கை என்பது தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது. அப்படியிருக்கும் போது, அந்த சுற்றறிக்கையை நேரடியாக எதிர்க்காமல் நீதிமன்றம் எவ்வாறு உத்தரவிட முடியும்?” என்று கேள்வி எழுப்பினர்.

    இதனைத் தொடர்ந்து, தற்போதைய மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, மத்திய அரசின் சுற்றறிக்கையை முறைப்படி எதிர்த்துப் புதிய வழக்குத் தொடர அனுமதிக்குமாறு மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பழைய மனுவைத் திரும்பப் பெறவும், மத்திய அரசின் உத்தரவை எதிர்த்துப் புதிய வழக்குத் தொடரவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடாஸ்மாக் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக மாற்றியமைப்பு!. தமிழக அரசு!.
    Next Article அண்ணாமலை Vs லதா ரஜினிகாந்த்: புதிய அறிவிப்பின் பின்னணியில் பாஜகவா?
    Editor web3
    • Website

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.