Close Menu
    What's Hot

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நிலுவையில் வழக்கு ; பரோல் வழங்க முடியுமா? – நீதிபதி அமர்வு விசாரணை தொடக்கம்
    தமிழ்நாடு

    நிலுவையில் வழக்கு ; பரோல் வழங்க முடியுமா? – நீதிபதி அமர்வு விசாரணை தொடக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 hicourt
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    குற்ற வழக்குகளில் தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு, உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ நிலுவையில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட கைதிக்கு பரோல் வழங்க முடியுமா என்பது குறித்து முடிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தனது விசாரணையை துவங்கியுள்ளது.

    குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் சார்பில், பல்வேறு காரணங்களுக்காக பரோல் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. தண்டனையை எதிர்த்து இவர்கள் மேல்முறையீட்டு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

    இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு, மேல்முறையீடு வழக்குகள் நிலுவையில் உள்ளபோது பரோல் வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் இரு வேறு அமர்வுகள் வெவ்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி, இதுதொடர்பாக, முடிவெடுக்கும் வகையில் வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து 2025ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி உத்தரவிட்டது.

    இதன் அடிப்படையில், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஏ. டி.ஜெகதீஷ் சந்திரா, எம்.நிர்மல்குமார், சுந்தர் மோகன் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது. மேல்முறையீடு வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, தமிழ்நாடு தண்டனை நிறுத்திவைப்பு விதிகளின் கீழ், கைதிக்கு உயர் நீதிமன்றமோ, அரசோ பரோல் வழங்க முடியுமா என்ற கேள்விகக்கு விடை காண்பது தொடர்பான இந்த வழக்கு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, பரோல் வழங்க உயர் நீதிமன்றத்துக்கும், அரசுக்கும் அதிகாரம் உள்ளதாக அனைத்து தரப்பினரும் தெரிவித்ததால், மாற்று கருத்து இருக்கிறதா என அறிந்துகொள்ளும் வகையில், நீதிமன்றத்துக்கு உதவியாக வழக்கறிஞர் ஒருவரை நியமிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article48 அணிகள் மோதுகின்றன – நாளை தொடங்குகிறது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி
    Next Article ஐசிசி டெஸ்ட் தரவரிசை! முதலிடத்தை இழந்த ஜோ ரூட்!. NO.1 யார் தெரியுமா?. சுப்மன் கில் அசத்தல்!
    Editor TN Talks

    Related Posts

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    June 10, 2026

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    June 10, 2026

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    உலகக் கோப்பை திருவிழா!. கால்பந்து வரலாற்றை ஆண்ட ‘மகுடங்கள்’ யார் யார்?. சாதனை வரலாறு இதோ!

    `இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜாவுக்கு புகழ் வணக்கம்  – சீமான் அஞ்சலி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.