Close Menu
    What's Hot

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»Featured»பாஜகவின் ஜெராக்ஸ்; காய்ந்துபோன சக்தி; மிஸ்டர் சீப் மினிஸ்டர் – கலாய்த்த மு.க.ஸ்டாலின்!
    Featured

    பாஜகவின் ஜெராக்ஸ்; காய்ந்துபோன சக்தி; மிஸ்டர் சீப் மினிஸ்டர் – கலாய்த்த மு.க.ஸ்டாலின்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 13, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 mkstalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் நடைபெற்ற திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை, மிஸ்டர் சீப் மினிஸ்டர் எனக் கூறி கலாய்த்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    தேர்தலுக்கு முன்பு வெல்லும் தமிழ் பெண்கள், மண்டல மாநாடுகள், வீடு வீடாகச் சென்று பிரசாரம், சமூக வலைத்தள செயல்பாடுகல் என மகளிர் அணியினர் மல்டி டாஸ்க்கிங் பணிகளை எழுச்சியுடன் செய்து முடித்தீர்கள்.

    திமுக பெற்றுள்ள வாக்குகளுக்கு உங்களின் முயற்சிகள் முக்கியம். அதற்கு நன்றிகள்.

    எதிர்க்ட்சியாக இருக்கும் நாம், மீண்டும் ஆளும் கட்சியா மாற வேண்டும் என்றால், நீங்கள் இன்னும் சுறுசுறுப்பாவும் ,வேகமாகவும் செயல்படவேண்டும். அதுக்கான களமாகத்தான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

    6 மாசம் கூட இந்த ஆட்சி நடக்குமா?  என நான் கலந்து கொண்ட நிகழ்வுகளில் பேசினேன்.

    அதனை உண்மைக்கு மாறாக திரித்து,  ஆட்சியைக் கவிழ்க்க சதியா என எதிரிகள் அழ ஆரம்பித்துவிட்டனர்.

    திமுக கழகம் பொறுப்பான எதிர்க்கட்சியாக தனது கடமையை செய்யும்.

    ந்த ஆட்சியின் தோலிவிகளைச் சுட்டிக்காட்டுவோம். கேள்வி கேட்போம். அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள்.

    5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியை மகளிருக்க்கான ஆட்சி என கனிமொழி குறிப்பிட்டார்கள்

    ஆட்சியின் முதல் கையெழுத்தான விடியல் பயணத்தில் தொடங்கி, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் ஏராளமான திட்டங்களை மகளிருக்காக உருவாக்கினோம்.

    இப்போது  நடந்து முடிந்த தேர்தலிலும் 8ஆயிரம் கூபப்ன் கொடுக்கும் இல்லத்தரசி திட்டம், உரிமைத் தொகை உயர்வு என மகளிருக்கு நிறைய வாக்குறுதிகளை அறிவித்திருந்தோம்.

    மக்கள் இப்போது என்ன நினைக்கிறார்கள் என சமூக வலைதளத்த்தில் வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள்.

    நாள்தோறும் நடைபெறும் குற்றச்சம்பங்கள்,  மின்வெட்டு, விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி நாடகம் என ஓட்டுப்போட்ட மக்களும், ஓட்டுப் போடாதவர்களும் இந்த ஆட்சியின் மீது வெறுப்பில் உள்ளனர்.

    தவெக ஆட்சியில் குற்றங்கள் பெருகிவிட்டது. கொடூர குற்றச்சம்பங்கள் குறித்து நாள்தோறும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

    ஆளும்கட்சியில் சேர்ந்த நபர்களால் நடைபெற்றுள்ள பாலியல் குற்றங்களைச் சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின்

    மக்களுக்கு தவெக பாதுகாப்பு கொடுப்பதை விட இப்போது தவெகவிடம் இருந்து பாதுகாப்பு கேட்கும் நிலைக்கு மக்கள் வந்துட்டங்கா என்றார்.

    ஷாப்பிங் போனா,  டிரெஸ் , வீட்டுக்கு பொருட்களை வாங்குவார்கள். ஆனால் முதலமைச்சர் விஜய்  அதிமுக எம்.எல்.ஏக்களை ஷாப்பிங் செய்கிறார்.

    அவர் ஆட்சி மீது அவருக்கு நம்பிக்கை இல்லையா? அல்லது  ஆதரவளிக்கும் கட்சிகள் மீது நம்பிக்கை இல்லையா?

    நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது தவெகவுக்கு ஆதரவா அதிமுகவினர வாக்களிக்க வச்சாரு, இப்ப அந்த எம்.எல்.ஏக்களையே ராஜினாம செய்ய வச்சி கட்சியில் சேர்க்குறாரு.

    பாஜக மத்த மாநிலங்கள்ல செய்றதை, இப்ப தமிழ்நாட்டுல விஜய் செய்கிறார். பாஜகவின் ஜெராக்‌ஷாக விஜய் செயல்படுகிறாரா?

    உதவின்னு கேட்டப்போ ஆதரவுக் கொடுத்த கட்சிகளும் இப்ப சந்தேகப்படுறாங்க.

    ஓட்டுப்போட்ட மை அழியும் முன்னாடியே ராஜினா செஞ்சிட்டு இன்னொரு கட்சிக்கு ஆதரவு கொடுக்குறாங்க.  இதனை ஜனநாயகசக்திகள் கேள்வி கேட்கணுமா வேண்டாமா?

    அப்படி என்ன ஆஃபர் தவெகவுல கிடைச்சிருக்குன்னு கேக்கணுமா வேணாமா? ஜனநாயகத்த கேலிக் கூத்தாக்குற ஆட்சியாக இது இருக்குது.

    கான்பிடெண்டா இருங்கன்னு மேடைக்கு மேடை விஜய் சொல்றாரு… ஆனா அவர் முதல கான்பினெண்டா இருக்காரா?

    தீர்ந்து போன சக்தின்னு சொன்னவங்கக்கிட்ட திருடிக்கிட்டு இருக்கிற இவரு காய்ஞ்சி போன சக்தி.

    நிதி ஆயோக் கூட்டத்தில், திராவிட மாடல் ஆட்சியின்போது செய்த சாதனைகளையும் நாம் வைத்த கோரிக்கைகளையும்தான் விஜய் பேசியிருக்காரு.

    நான் முதலமைச்சராக இருக்கும்போது நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டதை, அமுலாக்கத்துறை வழக்கில் தப்பிக்கப் போனாங்க,  பாஜக கால்ல விழுந்ததாலத்தான் முன்வரிசையில் இருக்க வச்சாங்கன்னு சொன்னாரு விஜய். இப்ப நீங்க என்ன பண்ணிக்கிட்டு வந்திருக்கீங்கன்னு  நான் கேட்கிறேன்.

    மிஸ்டர் சீப் மினிஸ்டர், மாண்புமிகு முதலமைச்சர் கரூர் வழக்குல இருந்து தப்பிக்க டெல்லி போனீங்க, பாஜகவை எதிர்த்து பேசுனா ஆட்சிக்கு பறிபோயிடும்னு பயப்படுறீங்களான்னு உங்கள மாதிரி தரம் தாழ்த்தி விமர்சிக்க நான் விரும்பல…

    கல்வி நிதி தொடர்பா நீங்க மட்டும் என்ன பண்ணிக்கிட்டு வந்திருக்கீங்க..நிபந்தனை இல்லாம நிதி யைக் கொடுங்கன்னுதான் கேட்டிருக்கீங்க. இது சினிமா இல்ல… ஆட்சி நிர்வாகம் இப்படித்தான் இருக்கும்.

    மாநில உரிமைகள் சார்ந்த எதுவாக இருந்தாலும் திராவிட மாடல் போட்டுத் தந்த ப்ளுபிரிண்ட் பாதையிலதான் செயல்படமுடியும். மிஸ்டர் சிப் மினிஸ்டர், ஓ ஸாரி மாண்பு மிகு முதலமைச்சர்…

    நம்மை நம்பி வாக்களித்தவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதோடு லட்சக்கணக்கான இளம்பெண்களை திமுகவுக்கு இழுத்து வரவேண்டும்.

    நம்முடைய இயக்கம் அறிவியக்கம் என்பதைக் காட்டுங்க. நமது இயக்கத்தை நோக்கி அழைத்து வாங்க.

    கட்சி என்பது தலை, ஆட்சி என்பது கீரிடம் என  கருணாநிதி சொன்னார்.  கிரீடத்தை வைத்துக் கொண்டு தலையைத் தேடமுடியாது. இப்போ தலையை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

    திமுகவின் பயணம் தொடர உங்களின் உழைப்பைத்  கொடுங்கள்…

    அண்ணனாக, தம்பியாக, சகோதரனாக ஒட்டுமொத்தமாக உடன்பிறப்பாக நா இருப்பேன்.

    இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசொந்த கட்சிக்காரர்களிடமிருந்து பெண்களை காக்க என்ன படை..?? முதல்வர் விஜய்க்கு நயினார் கேள்வி..!!
    Next Article நாளை முடிவடைகிறது மீன்பிடி தடைக்காலம்..!! கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்..!!
    Editor TN Talks

    Related Posts

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    June 15, 2026

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    June 15, 2026

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.