Close Menu
    What's Hot

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்
    Featured

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    Editor web2By Editor web2June 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thangam thennarasu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் மாநிலத்தின் கடன் ரூ.10 லட்சம் கோடியை எட்டியதாகவும், வருவாய்ப் பற்றாக்குறை ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளதாகவும்  குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

    மேலும், திமுக ஆட்சியில் வருவாய் உயர்த்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமல், புதிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டதால் நிதிச் சுமை அதிகரித்ததாகவும், மூலதனச் செலவினங்கள் குறைந்ததால் வளர்ச்சிக்கான முதலீட்டு வாய்ப்புகள் பாதிக்கப்பட்டதாகவும் வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தனது எக்ஸ் தள பதிவில், “தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கைகளில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வாணவேடிக்கை வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையையும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையையும் மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது” என விமர்சித்துள்ளார்.

    மேலும், “மக்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் இறங்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில், தங்களின் தோல்விகளை மறைக்கும் ‘Escapism’ முயற்சியாகவே இந்த வெள்ளை அறிக்கை நாடகம் நடத்தப்பட்டுள்ளது. பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த அறிக்கை இறுதியில் ‘ஹைப்’ ஏற்றப்பட்ட ‘ஃப்ளாப் ஷோ’வாகவே மாறியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    வெள்ளை அறிக்கையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விரிவான விளக்கத்தை விரைவில் அளிப்பேன் என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    PoliticalWar TamilNaduFinance ThangamThennarasu WhitePaperRow
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!
    Next Article கூடும் சட்டமன்றம்…  காத்திருக்கும் பிரச்சனைகள்…  எப்படி சமாளிக்கப்போகிறது தவெக?
    Editor web2
    • Website

    Related Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    August 1, 2026

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    August 1, 2026

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்யராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.