Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆளும் கட்சியினரின் மிரட்டல்களுக்கு அஞ்சும் இயக்கம் அல்ல திமுக..!! கொந்தளித்த மு.க.ஸ்டாலின்..!!
    Featured

    ஆளும் கட்சியினரின் மிரட்டல்களுக்கு அஞ்சும் இயக்கம் அல்ல திமுக..!! கொந்தளித்த மு.க.ஸ்டாலின்..!!

    editor5By editor5June 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 16 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.

    தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை (டி.வி.ஏ.சி.) அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு தொடர்புடைய 13 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைக்கு முன்னதாக, சாலை அமைப்புப் பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

    குறிப்பாக, நான்கு இடங்களில் சாலை அமைக்காமலேயே பணம் செலுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எ.வ.வேலு, கண்ணன், பூபாலன், பெரியசாமி, சத்தியபாமா உள்ளிட்டோர் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தச் சோதனை நடவடிக்கைக்கு தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் எ.வ.வேலு அவர்களின் வீட்டில் டி.வி.ஏ.சி. ரெய்டு நடைபெற்று வருகிறது. அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் தன் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்” என்று கூறியுள்ளார்.

    மேலும், “அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஊழல் எனக் கூறப்பட்ட எந்த வழக்கிலும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்பதே வரலாறு. ஆளும்கட்சியினரின் மிரட்டல்களுக்கு அஞ்சும் இயக்கம் அல்ல தி.மு.க. இதைவிடப் பெரிய அடக்குமுறைகளை எதிர்கொண்டவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்” என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    இந்தச் சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எ.வ.வேலு தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பதால், இந்த வழக்கு மற்றும் சோதனை அரசியல் களத்தில் புதிய விவாதங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ev velu MK Stalin raid
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅடக்கி வாசித்தால் செங்கோட்டையனுக்கு நல்லது..! என்னை அவருக்கு நன்றாக தெரியும்..! நயினார் நாகேந்திரன் காரசார பேட்டி..!
    Next Article அமோனியா வாயு கசிவு; உயிரிழப்பு 11ஆக அதிகரிப்பு – சுகாதாரத் துறை தகவல்
    editor5

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.