Close Menu
    What's Hot

    ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் மறைவு..!! முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி..!!

    கோவை : சோதனைச் சாவடிகளில் அமைச்சர் விக்னேஷ் திடீர் ஆய்வு..! கனிம வளங்கள் கடத்தலை தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு..!

    பொதுக்குழுவில் தீர்மானம் ; திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது மதிமுக

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காற்றில் கலந்தார் நடிகர், இயக்குநர் பாக்யராஜ்..!! இபிஎஸ் , நயினார் நாகேந்திரன் இரங்கல்..!!
    Featured

    காற்றில் கலந்தார் நடிகர், இயக்குநர் பாக்யராஜ்..!! இபிஎஸ் , நயினார் நாகேந்திரன் இரங்கல்..!!

    editor5By editor5June 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 12 10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் நகைச்சுவை பாணியில் தனித்துவம் பெற்றவர் எனப் பெயர் பெற்ற கே. பாக்யராஜ், 73-வது வயதில் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.

    தமிழ் சினிமாவில் திரைக்கதை அமைப்பில் புதிய பாணியை உருவாக்கிய முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படும் இவர், குடும்ப வாழ்க்கை சார்ந்த கதைகள் மற்றும் சமூக நையாண்டி கூறுகளைக் கலந்த திரைப்படங்களால் ரசிகர்களிடையே தனித்த இடத்தைப் பெற்றவர். ஒரு சாதாரண கதையையும் சுவாரசியமான திருப்பங்களுடன், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளைச் சேர்த்து சொல்லும் அவரது தனித்துவமான திரைக்கதை பாணி பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘முந்தானை முடிச்சு’, ‘மௌன கீதங்கள்’, ‘தூறல் நின்னு போச்சு’, ‘அந்த 7 நாட்கள்’ உள்ளிட்ட அவரது படைப்புகள் தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களாகக் கருதப்படுகின்றன. இவ்வாறான படங்கள் இன்றும் திரைக்கதை எழுதும் இயக்குநர்களுக்கு ஒரு பாடமாக உள்ளன.

    தமிழ் திரைப்பட உலகில் வணிகரீதியாகவும், கலைநயத்துடனும் படங்களை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்த முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவரது படைப்புகள் மற்றும் பங்களிப்பு தமிழ் சினிமா வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கும் என திரையுலகினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

    image 11 16இந்நிலையில் பாக்யராஜ் மறைவிற்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் பக்கத்தில், பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய பாக்யராஜ் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு. பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார். இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், என்று பதிவிட்டுள்ளார்.

    இதேபோல் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழ் திரையுலகின் “திரைக்கதை மன்னன்” என்று போற்றப்பட்ட இயக்குநர் பாக்யராஜ் இன்று காலமானார் என்ற செய்தி என்னை மிகுந்த துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. ஒரு திரைப்படத்தின் திரைக்கதை எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு அவரது படைப்புகள் இன்றளவும் சிறந்த பாடமாக விளங்கி வருகின்றன. எளிமையான கதை, நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றை தனக்கே உரிய பாணியில் இணைத்து, தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற காலத்தால் அழியாத படைப்புகளை அவர் வழங்கியுள்ளார். அவரது திரைப்படங்கள் என்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் நிலைத்து நிற்கும். அவரது கலைப் பயணமும், சாதனைகளும் வருங்கால இயக்குநர்களுக்கும் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் என்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

     

    Actor Bhagyaraj Director
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகொல்கத்தா கட்டிட விபத்து..!! உயிரிழப்பு 16 ஆக உயர்வு..!! தொடரும் மீட்புப்பணி..!!
    Next Article சமூக சீர்திருத்த கருத்துகளைப் பரப்பியவர் பாக்யராஜ்..!! கே.எஸ் ரவிக்குமார் புகழாரம்..!!
    editor5

    Related Posts

    ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் மறைவு..!! முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி..!!

    June 27, 2026

    கோவை : சோதனைச் சாவடிகளில் அமைச்சர் விக்னேஷ் திடீர் ஆய்வு..! கனிம வளங்கள் கடத்தலை தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு..!

    June 27, 2026

    பொதுக்குழுவில் தீர்மானம் ; திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது மதிமுக

    June 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் மறைவு..!! முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி..!!

    கோவை : சோதனைச் சாவடிகளில் அமைச்சர் விக்னேஷ் திடீர் ஆய்வு..! கனிம வளங்கள் கடத்தலை தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு..!

    பொதுக்குழுவில் தீர்மானம் ; திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது மதிமுக

    ஐதராபாத் சாலைக்கு அமெரிக்க அதிபரின் பெயர்..!! டிரம்பை பெருமைப்படுத்திய தெலங்கானா..!!

    படைப்பாற்றலால் சினிமாவுக்கு பங்களித்தவர் கே.பாக்யராஜ் – கு.செல்வப்பெருந்தகை இரங்கல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.