Close Menu
    What's Hot

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோவையின் கனவு நனவாகிறது.. ஏர்போர்ட் விரிவாக்கம் கன்ஃபார்ம்..!! அமைச்சர் கீர்த்தனா கொடுத்த அப்டேட்..!!
    Featured

    கோவையின் கனவு நனவாகிறது.. ஏர்போர்ட் விரிவாக்கம் கன்ஃபார்ம்..!! அமைச்சர் கீர்த்தனா கொடுத்த அப்டேட்..!!

    editor5By editor5July 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 22
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தொழில் வளர்ச்சியை முன்னிறுத்தும் வகையில் கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் திட்டம் விரைவில் நிறைவேறும் என்று தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உறுதியளித்துள்ளார். இது தொழில்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதற்கென பிரத்யேகக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இம்முறை திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) தென்னிந்திய மண்டல ஆலோசனை கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த CII பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தற்போதைய தொழில் சூழல், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், இரு மாநிலங்களும் இணைந்து செயல்படக்கூடிய துறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.

    இதன் ஒரு பகுதியாக CII SPRINT 2030 என்ற புதிய முன்னெடுப்பும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் 2030-ம் ஆண்டுக்குள் தொழில் வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீர்த்தனா, தொழில்துறையினர் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை முக்கிய கோரிக்கையாக முன்வைத்ததாகக் கூறினார். SIPCOT தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் இடங்களில் சாலை, மின்சாரம், நீர் ஆகிய அத்தியாவசிய வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    “அரசு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வெளிப்படையான அரசாகச் செயல்படும்” என்று உறுதியளித்த அவர், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) தற்செயலாகக் கையெழுத்திடப்படாது என்றும், ஒவ்வொரு நிறுவனத்தையும் கவனமாக ஆராய்ந்த பின்னரே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் விளக்கினார். உயர் ஊதிய வேலைவாய்ப்பு மற்றும் MSMEஉயர் ஊதிய வேலைகளை (High Pay Jobs) ஈர்ப்பதே தற்போதைய முக்கிய இலக்கு என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

    MSME துறையின் மேம்பாட்டுக்காகவும் தனிக் குழு அமைக்கப்பட்டு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. FDI மூலம் MSME-வை வலுப்படுத்துவதற்கான செயல்திட்டங்களும் தீவிரமாக நடைபெறுகின்றன. சோலார் திட்டங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கருவேல மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சோலார் திட்டங்கள் அமைப்பது பயனுள்ளதாக இருக்கும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் சோலார் மின் உற்பத்திக்கு விதிக்கப்படும் 1% கட்டணம் குறித்து தொடர்புடைய அமைச்சருடன் பேசி தீர்வு காணப்படும் என்றார்.

    முழு செயல்பாட்டு உத்தரவாதம்வெளி மாநிலத் திட்டங்களுக்கு கமிஷன் பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அமைச்சர், கடந்த காலத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பல செயல்படுத்தப்படாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டினார். “60% ஒப்பந்தங்கள் கையெழுத்தானாலும் 25% மட்டுமே நடைமுறைக்கு வந்தன. இனி 100% செயல்படுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். “எம்டி பேப்பரில் ஒப்பந்தம் போட்டுவிட்டு வரக்கூடாது. இளைஞர்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லாமல் இங்கேயே தொழில் செய்யும் சூழலை உருவாக்குவோம்” என்றார்.

    கோவையில் வரவிருந்த செமிகண்டக்டர் திட்டம் குஜராத்துக்கு சென்றதா என்ற கேள்விக்கு, மத்திய அரசுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், திட்டம் கண்டிப்பாகக் கொண்டுவரப்படும் என்றும் உறுதி அளித்தார். இந்தக் கூட்டம் தென் இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தொழில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

    keerthana Minister TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎன்ன ஆச்சு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு..?? சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் அட்மிட்..!!
    Next Article குதிரை பேர விவகாரம்!. செந்தில் பாலாஜி சகோதரர் முன் ஜாமீன் கோரி மனு!. காவல்துறைக்கு கெடு விதித்த நீதிமன்றம்!
    editor5

    Related Posts

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    July 3, 2026

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.