Close Menu
    What's Hot

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»வர்த்தகம்»55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!
    வர்த்தகம்

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    Editor web2By Editor web2July 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 05 18h21m39s290
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பனைத் தொழிலை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில், 55 அடி உயரமுள்ள பனைமரத்தில் ரூ.60 ஆயிரம் செலவில் இரும்பு படிக்கட்டு அமைத்துள்ள இளைஞரின் முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சாலைப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தினகர், விவசாயத்துடன் பாரம்பரிய பனைத் தொழிலையும் செய்து வருகிறார். பல தலைமுறைகளாக அவரது குடும்பம் பனைத் தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

    தினகரின் தந்தை ஏசுதாசன் (70) பல ஆண்டுகளாக பனை ஏறும் தொழிலாளியாக பணியாற்றியவர். வயது முதிர்வு காரணமாக தற்போது பனைமரத்தில் ஏற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பனைத் தொழில் அழியாமல் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில், தனது வீட்டின் அருகே உள்ள 55 அடி உயரமுள்ள பனைமரத்தில் ரூ.60 ஆயிரம் செலவில் இரும்புக் கம்பிகளால் வளைவு வடிவிலான நிரந்தர படிக்கட்டை அமைத்துள்ளார்.

    vlcsnap 2026 07 05 18h21m52s605

    இந்த படிக்கட்டு மூலம் இளைஞர்கள் மட்டுமின்றி பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டோரும் பாதுகாப்பாக பனைமரத்தின் உச்சிக்குச் சென்று பதநீர் இறக்க முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தினகர் கூறுகையில், “தலைமுறை தலைமுறையாக பனைத் தொழில் செய்து வருகிறோம். ஆனால் தற்போது பனை ஏறும் தொழிலாளர்கள் மிகவும் குறைந்துவிட்டனர். அதனால் பனைத் தொழில் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டேன். இதுபோன்ற படிக்கட்டுகளை அதிகமான பனைமரங்களில் அமைத்தால், இளைஞர்கள் எளிதாக பனை ஏறி தொழிலை தொடர முடியும்” என்றார்.

    vlcsnap 2026 07 05 19h10m34s763

    மேலும், “ஒரு பனைமரத்தில் இருந்து தினமும் சுமார் 20 லிட்டர் பதநீர் கிடைக்கும். அதிலிருந்து சுமார் 5 கிலோ கருப்பட்டி தயாரிக்கலாம். இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். பனைத் தொழிலை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

    IronStaircase PalmTree TraditionalLivelihood Tutucorin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!
    Next Article திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!
    Editor web2
    • Website

    Related Posts

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    July 5, 2026

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    July 5, 2026

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.