Close Menu
    What's Hot

    ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அதிரடி.. இந்திய கப்பல் வழிமறிப்பு! நிலவும் பதற்றம்..!!

    ஒரு ரூ.500 நோட்டு… அயோத்தி ராமர் கோயிலில் வெளிச்சத்துக்கு வந்த கோடி ரூபாய் திருட்டு..!! பகீர் காரணம்..!!

    PF பயனர்களுக்கு குட்நியூஸ்!. ஜூலை 15-க்குள் வட்டி வரவு!. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»”எவ்வளவு பெரிய அணை கட்டினாலும் காவிரி தமிழகம் வந்தே தீரும்” – மு. வீரபாண்டியன்
    Featured

    ”எவ்வளவு பெரிய அணை கட்டினாலும் காவிரி தமிழகம் வந்தே தீரும்” – மு. வீரபாண்டியன்

    Editor web2By Editor web2July 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 veerapandiyan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கர்நாடக அரசு மேகேதாட்டு அணை திட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், “எவ்வளவு வலுவான அணை கட்டினாலும், காவிரி ஆறு அணையை உடைத்துக்கொண்டு தமிழ் மண்ணுக்குத்தான் வரும்; இயற்கையின் விதியை மாற்ற மத்திய அரசாலும், கர்நாடக அரசாலும் முடியாது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

    கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநிலக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

    ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு உணவுப் பொருட்களின் அளவை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பது ஏற்க முடியாதது என்றும், நெய்வேலி நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் முடிவையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.

    விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், அதுவரை வசூல் நடவடிக்கைகளை நிறுத்த முதலமைச்சர் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கரூரில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

    ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தில் தலையிடக் கூடாது என்றும், சட்டப்படி செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியில் இருந்து அரசியல் ரீதியாக ஆதரவு அளித்து வருவதாகவும், எந்த அதிகாரப் பதவியோ அல்லது பலனோ தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

    அமைச்சரின் ஆங்கிலப் பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே; அறிவு அல்ல. தாய்மொழி தமிழை வளர்க்கும் வகையிலேயே உரையாடியிருக்க வேண்டும்” என்றார்.

    மேலும், டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்பட வேண்டும் என்றும், காவிரி, மேகேதாட்டு, மதச்சார்பின்மை மற்றும் தொழிலாளர் உரிமைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 6 முதல் 15 வரை நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.

    cauvery CPI MekedatuDam MVeerapandian
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதுரோகங்களின் வரலாறு உலகறியும்..!! மாணிக்கம் தாகூரை வெளுத்து வாங்கிய நயினார்..!!
    Next Article டி20 அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்… கம்பீரின் புதிய வியூகம் என்ன..??
    Editor web2
    • Website

    Related Posts

    ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அதிரடி.. இந்திய கப்பல் வழிமறிப்பு! நிலவும் பதற்றம்..!!

    July 8, 2026

    ஒரு ரூ.500 நோட்டு… அயோத்தி ராமர் கோயிலில் வெளிச்சத்துக்கு வந்த கோடி ரூபாய் திருட்டு..!! பகீர் காரணம்..!!

    July 8, 2026

    PF பயனர்களுக்கு குட்நியூஸ்!. ஜூலை 15-க்குள் வட்டி வரவு!. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு!

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் அதிரடி.. இந்திய கப்பல் வழிமறிப்பு! நிலவும் பதற்றம்..!!

    ஒரு ரூ.500 நோட்டு… அயோத்தி ராமர் கோயிலில் வெளிச்சத்துக்கு வந்த கோடி ரூபாய் திருட்டு..!! பகீர் காரணம்..!!

    PF பயனர்களுக்கு குட்நியூஸ்!. ஜூலை 15-க்குள் வட்டி வரவு!. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவிப்பு!

    அடேங்கப்பா..!! தினமும் லட்சத்தை தொடும் மக்கள் வருகை.. அம்மா உணவகங்களுக்கு கூடும் மவுசு..!!

    தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.