Close Menu
    What's Hot

    FIRST NIGHT ரூமாக மாறிய AC கோச்..!! சிக்கிய டிக்கெட் செக்கர்.. அதிரடி சஸ்பெண்ட்..!!

    பிரதமர்கள் மோடி – அல்பனீஸ் வரலாற்றுச் செல்ஃபி – இந்தியா-ஆஸ்திரேலியா உறவின் புதிய அத்தியாயம்  

    அயோத்தி ராமர் கோவில் காணிக்கை விவகாரம்: காங்கிரஸை வசைபாடிய கங்கனா ரணாவத்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவோம்.. அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!
    Featured

    ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவோம்.. அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

    editor5By editor5July 9, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 5 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியம் மீண்டும் உச்சகட்ட பதற்றத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஈரான் பாதுகாப்பு படைகள் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மூடிவிடுவோம் என்று பதிலடி கொடுத்துள்ளன.

    கடந்த மாதம் 17ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு வளைகுடா பிராந்தியத்தில் சற்று அமைதி நிலவத் தொடங்கியது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபத்தில் மூன்று கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் இந்த அமைதியை சிதைத்துவிட்டன. ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட பாதைகள் வழியாக மட்டுமே கப்பல்கள் செல்ல அனுமதிப்பதாகவும், அதை மீறுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவங்களால் கோபமடைந்த அமெரிக்கா, ஈரானின் பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் துறைமுகம் பெரும் சேதத்தை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின. ஈரான் பக்கம் இருந்தும் பதிலடி தாக்குதல்கள் நடைபெற்றன.

    இந்நிலையில், டிரம்ப் அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக அறிவித்தது. மேலும், “கார்க் தீவை முழுமையாக கைப்பற்றுவோம்” என்று மிரட்டியுள்ளார். இதற்கு பதிலாக ஈரான் பாதுகாப்பு வட்டாரங்கள், “அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவோம். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட ஏற்பாடுகளுக்கு அப்பாற்பட்ட எந்தப் புதிய வழித்தடத்தையும் அனுமதிக்க மாட்டோம்” என்று தெளிவுபடுத்தியுள்ளன.

    உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே செல்கிறது. இந்த ஜலசந்தி மூடப்பட்டால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை பெரும் உயர்வை சந்திக்கும். பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
    ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இதுகுறித்து கூறுகையில், “நாகரிகமும் துணிச்சலும் மிக்க ஈரான் மக்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளால் பேசுவது அவர்களின் மகத்துவத்தை எள்ளளவும் பாதிக்காது. நாங்கள் தரக்குறைவான பேச்சுக்கு அதே மொழியில் பதிலளிக்க மாட்டோம். மாறாக, அச்சமின்றி, துணிவுடன் செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுப்போம்” என்றார்.

    இந்த மோதல் மத்திய கிழக்கு முழுவதும் புதிய போர் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சமூகம் இந்தப் பதற்றத்தை தணிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க துருப்புகளும் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    donald trump iran - us war
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“தாக்குதல் உச்சத்தை எட்டும்”..!! ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க வார்னிங்..!!
    Next Article அமெரிக்கா மீண்டும் அதிரடி.. 2வது நாளாக ஈரானை குறிவைத்து குண்டுவீச்சு..!! பதற்றம் உச்சம்..!!
    editor5

    Related Posts

    FIRST NIGHT ரூமாக மாறிய AC கோச்..!! சிக்கிய டிக்கெட் செக்கர்.. அதிரடி சஸ்பெண்ட்..!!

    July 9, 2026

    பிரதமர்கள் மோடி – அல்பனீஸ் வரலாற்றுச் செல்ஃபி – இந்தியா-ஆஸ்திரேலியா உறவின் புதிய அத்தியாயம்  

    July 9, 2026

    அயோத்தி ராமர் கோவில் காணிக்கை விவகாரம்: காங்கிரஸை வசைபாடிய கங்கனா ரணாவத்..!!

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    FIRST NIGHT ரூமாக மாறிய AC கோச்..!! சிக்கிய டிக்கெட் செக்கர்.. அதிரடி சஸ்பெண்ட்..!!

    பிரதமர்கள் மோடி – அல்பனீஸ் வரலாற்றுச் செல்ஃபி – இந்தியா-ஆஸ்திரேலியா உறவின் புதிய அத்தியாயம்  

    அயோத்தி ராமர் கோவில் காணிக்கை விவகாரம்: காங்கிரஸை வசைபாடிய கங்கனா ரணாவத்..!!

    ரூ.440 கோடி வங்கிப் பணம் முடக்கம்..!! திரிணாமுல் காங்கிரசை சிக்கவைத்த ED நடவடிக்கை..!!

    ஒரே நைட்.. 80 இடங்கள் மொத்தமா காலி!! அமெரிக்காவின் மின்னல் தாக்குதல்.. ஈரான் ஆவேசம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.