Close Menu
    What's Hot

    பெரம்பலூரில் அலர்ட் செய்த போலீஸ்.. கரூரில் மட்டும் ஏன் செய்யல..?? விஜய் சரமாரி கேள்வி..!!

    கரூர் அரசு விழாவில் செய்தியாளர்கள் வெளியேற்றம்.. பாதுகாப்பு பெயரில் அதிகார துஷ்பிரயோகம்..??

    முதல்வராக கரூர் மக்கள் மத்தியில் விஜய்..!! வெள்ளி வாள் பரிசளித்தார் எம்.ஆர் விஜயபாஸ்கர்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!
    Featured

    தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

    Editor web1By Editor web1July 10, 2026Updated:July 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Ra
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து கேரள கடலோரப் பகுதி வரை நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா.செழியன் காலமானார்..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!
    Next Article ஆத்திரத்தை கொட்டித்தீர்த்த அமெரிக்கா.. பதிலுக்கு குவைத், பஹ்ரைனில் அமெரிக்க தளங்களை குறிவைத்த ஈரான்.!!
    Editor web1
    • Website

    Related Posts

    பெரம்பலூரில் அலர்ட் செய்த போலீஸ்.. கரூரில் மட்டும் ஏன் செய்யல..?? விஜய் சரமாரி கேள்வி..!!

    July 10, 2026

    கரூர் அரசு விழாவில் செய்தியாளர்கள் வெளியேற்றம்.. பாதுகாப்பு பெயரில் அதிகார துஷ்பிரயோகம்..??

    July 10, 2026

    முதல்வராக கரூர் மக்கள் மத்தியில் விஜய்..!! வெள்ளி வாள் பரிசளித்தார் எம்.ஆர் விஜயபாஸ்கர்..!!

    July 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெரம்பலூரில் அலர்ட் செய்த போலீஸ்.. கரூரில் மட்டும் ஏன் செய்யல..?? விஜய் சரமாரி கேள்வி..!!

    கரூர் அரசு விழாவில் செய்தியாளர்கள் வெளியேற்றம்.. பாதுகாப்பு பெயரில் அதிகார துஷ்பிரயோகம்..??

    முதல்வராக கரூர் மக்கள் மத்தியில் விஜய்..!! வெள்ளி வாள் பரிசளித்தார் எம்.ஆர் விஜயபாஸ்கர்..!!

    சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார்: அதிரடி ரெய்டில் இறங்கிய ED..!! பரபரப்பில் தமிழகம்..!!

    கருப்பு உடையில்.. கரூர் நோக்கி முதல்வர் விஜய்..!! வழிநெடுகிலும் மக்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.