Close Menu
    What's Hot

    AI, கிளவுட் சேவை: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் அமேசான்

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டெல்லி: நீட் முறைகேடுகளுக்கு எதிராக உண்ணாவிரதம்.. சோனம் வாங்சுக்கின் உடல்நிலை கவலைக்கிடம்..!!
    Featured

    டெல்லி: நீட் முறைகேடுகளுக்கு எதிராக உண்ணாவிரதம்.. சோனம் வாங்சுக்கின் உடல்நிலை கவலைக்கிடம்..!!

    editor5By editor5July 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 38 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 17 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்து வருவதால், பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் அவருக்கு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாக நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் தாள் கசிவு, மதிப்பெண் திருத்தத்தில் குளறுபடி, பணம் பறி உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. இந்தச் சூழலில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கல்வித் துறையில் நிலவும் ஊழல்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுத்தனர்.

    கடந்த மாதம் டெல்லி ஜன்தர் மந்தரில் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் ஜூன் 28ஆம் தேதி முதல் சோனம் வாங்சுக் கலந்துகொண்டு உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். 17 நாட்களில் அவர் சுமார் 8.2 கிலோ எடை இழந்துள்ளார். அவரது ரத்த அழுத்தம் 107/70 mmHg ஆகவும், ரத்த சர்க்கரை அளவு 67 mg/dL ஆகவும் பதிவாகியுள்ளது. தசை இழப்பு மற்றும் உடல் வலி ஏற்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் சோனம் வாங்சுக்கை நேரடியாகத் தொடர்புகொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தவ் தாக்கரே அவருடன் பேசி உடல்நிலையை விசாரித்தார்.

    எழுத்தாளர் அருந்ததி ராய், நடிகர்கள் நசீருதீன் ஷா, ரத்னா பதக் ஷா, பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் உள்ளிட்ட பல்வேறு துறை பிரமுகர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு, “இது நீண்ட காலப் போராட்டம். உங்கள் தலைமை எதிர்காலத்திலும் தேவை. உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனினும், சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தைத் தொடர முடிவெடுத்துள்ளார்.

    “என்னிடம் நிறுத்தச் சொல்லாதீர்கள். அரசிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லுங்கள்” என்று அவர் பதிலளித்துள்ளார். ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் டெல்லியில் பேரணி நடத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இந்தப் போராட்டம் கல்வித் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை வலியுறுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    NEET protest sonam wangchuk
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதில் தவெக அரசுக்கு தயக்கம் ஏன்? – சீமான் கேள்வி
    Next Article வழக்கில் பெயர் இல்லை… ஆஜராக சொல்வது ஏன்? போலீஸுக்கு செந்தில் பாலாஜி கடிதம்..!!
    editor5

    Related Posts

    AI, கிளவுட் சேவை: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் அமேசான்

    July 14, 2026

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    July 14, 2026

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    AI, கிளவுட் சேவை: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் அமேசான்

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி நிலம் மோசடி வழக்கு..! அமைச்சரை தொடர்புபடுத்த வேண்டாம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.