Close Menu
    What's Hot

    நவோதயா பள்ளிகள் விவகாரம்: 3 வாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

    தவெக எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் – சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவா?

    லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை..! நிலத்தை விற்று படிக்க அனுப்பியதாக பெற்றோர் புலம்பல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»லிபியா : அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து..! 50 பேர் மாயம் என தகவல்..!
    Featured

    லிபியா : அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து..! 50 பேர் மாயம் என தகவல்..!

    Editor web4By Editor web4July 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐரோப்பிய நாடுகளில் புதிய வாழ்வை தேடி மத்திய தரைக்கடலைக் கடக்க முயலும் அகதிகளுக்கு, லிபியா தொடக்கப் புள்ளயாக உள்ளது. கடந்த 2011ல் நேட்டோ ஆதரவு பெற்ற புரட்சியின் மூலம் லிபியாவின் நீண்டகால அதிபரான கடாபி வீழ்த்தப்பட்டு கொல்லப்பட்டார்.

    அதன்பின்னர், அங்கு நிலவி வரும் அரசியல் குழப்பங்களையும் உள்நாட்டுக் கலவரங்களையும் கடத்தல்காரர்கள் சாதகமாக்கிக் கொண்டுள்ளனர்.
    ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வறுமை மற்றும் போர் காரணமாக ஓடிவரும் அகதிகளை ஐரோப்பாவிற்கு அனுப்பும் முக்கிய மையமாக லிபியாவை மாற்றியுள்ளனர்.

    அதிக பணத்தைப் பெற்றுக்கொண்டு, தகுதியற்ற மற்றும் மிகவும் பலவீனமான சிறிய படகுகளில் நூற்றுக்கணக்கான அகதிகளை அடைத்து அனுப்புகின்றனர். இதனால் கடல் பயணத்தின்போது அடிக்கடி விபத்துகள் நேரிட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாகின்றனர். அந்த வகையில்,

    ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு நாள்தோறும் அகதிகள் வருவது உண்டு. அந்த வகையில், சுமார் 60 அகதிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட படகு ஒன்று நேற்று லிபியாவினி கிழக்குக் கடலோர நகராஅ தோப்ருக் அருகே உள்ள பர்தா தீவுக்கு அருகே கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இந்த விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 50 பேர் மாயமாகி இருப்பதாகவும், அல்லது அவர்கள் உயிரிழந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என கடலோரக் காவல் படையினர் தெரிவிக்கின்றனர். விபத்தில் சிக்கிய 10 பேர் மட்டும் நீந்திப் பர்தா தீவை அடைந்து உயிர் தப்பியுள்ளனர்.

    கடந்த மாதம் கிழக்கு லிபியக் கடற்கரையில் நடந்த மற்றொரு படகு விபத்தில் 51 அகதிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு ஜனவரி 1 முதல் மே 16 வரையிலான குறுகிய காலத்திற்குள் மட்டும், மத்திய தரைக்கடல் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகேதார்நாத் பள்ளத்தாக்கில் தவறி விழுந்த இளைஞர் மீட்பு; எஸ்டிஆர்எஃப் வீரர்களின் துரித நடவடிக்கை
    Next Article நீட் முறைகேடு – தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இன்று 19-வது நாளாக சோனம் வாங்சுக்  உண்ணாவிரதம்
    Editor web4

    Related Posts

    நவோதயா பள்ளிகள் விவகாரம்: 3 வாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

    July 16, 2026

    தவெக எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் – சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவா?

    July 16, 2026

    லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை..! நிலத்தை விற்று படிக்க அனுப்பியதாக பெற்றோர் புலம்பல்..!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நவோதயா பள்ளிகள் விவகாரம்: 3 வாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

    தவெக எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் – சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவா?

    லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை..! நிலத்தை விற்று படிக்க அனுப்பியதாக பெற்றோர் புலம்பல்..!

    சபரிவர்மன் மரணத்தைச் சுற்றி சர்ச்சை..!! அப்பாவு எழுப்பிய கேள்விகளால் சூடுபிடித்த விவகாரம்!

    பொள்ளாச்சி : காடர் இன மக்களின் குரலாய் வெளியான ’அருள்வான்’ திரைப்படம்..! மலைவாழ் மக்களுக்கு சிறப்புக் காட்சி..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.