Close Menu
    What's Hot

    நவோதயா பள்ளிகள் விவகாரம்: 3 வாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

    தவெக எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் – சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவா?

    லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை..! நிலத்தை விற்று படிக்க அனுப்பியதாக பெற்றோர் புலம்பல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நீட் முறைகேடு – தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இன்று 19-வது நாளாக சோனம் வாங்சுக்  உண்ணாவிரதம்
    Featured

    நீட் முறைகேடு – தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி இன்று 19-வது நாளாக சோனம் வாங்சுக்  உண்ணாவிரதம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 vangsukh
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக், தனது போராட்டத்தின் 19-வது நாளை எட்டியுள்ளார்.

    ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதத்தின் பின்னணியில் வெளியிட்ட வீடியோவில், “என் உடல்நிலை நல்ல நிலையில் இல்லை. ஆனால் மிகவும் மோசமாகவும் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 59 வயதான வாங்சுக் மிகவும் பலவீனமடைந்துள்ள நிலையில், 24 மணி நேர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். ஜூலை 15 நிலவரப்படி அவரது உடல் எடை 57.15 கிலோவாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 400 கிராம் குறைந்துள்ளதுடன், உண்ணாவிரதம் தொடங்கியதிலிருந்து மொத்தம் 8.9 கிலோ எடை இழந்துள்ளார்.

    அவரது ரத்த அழுத்தம் 105/76 mmHg, ரத்தச் சர்க்கரை அளவு 80 mg/dL, ஆக்சிஜன் செறிவு 97% என பதிவாகியுள்ளது. அவர் சுயநினைவுடனும் மனதளவில் விழிப்புடனும் இருந்தாலும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தனது ஆதரவாளர்களிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோர வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஜூலை 20-ஆம் தேதி நடைபெறும் “சலோ சன்சத்” (நாடாளுமன்றம் நோக்கி பேரணி)யில் கலந்து கொள்ளுமாறு வாங்சுக் அழைப்பு விடுத்துள்ளார்.

    சோனம் வாங்சுக்குடன் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த பலரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) சார்பில் போராட்டத்தில் உள்ள நேஹா, மனீஷ், ஆமீன் ஆகியோரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், ஜேஎன்யூ மாணவர் சங்க இணைச் செயலாளர் டேனிஷ், ஜேஎன்யூ பராக் விடுதி தலைவர் ஹ்ரிஷிகேஷ் மற்றும் டெல்லி பல்கலைக்கழக மாணவர் தலைவர் தீபக் ஆகியோர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனிடையே காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், சோனம் வாங்சுக்கின் போராட்டம் நாட்டின் மனசாட்சியை எழுப்பியுள்ளது என்றும், மாணவர்களின் பிரச்சினைக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதால் உண்ணாவிரதத்தை முடிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதற்கு முன்பு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோரும் வாங்சுக்கிடம் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.

    வாங்சுக்கின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகக் கூறி, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க மத்திய மற்றும் டெல்லி அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்தை முன்னெடுத்து வரும் Cockroach Janta Party (CJP),  ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி அமைதிப் பேரணி மற்றும் ஒருநாள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. “கல்வி அமைச்சரின் ராஜினாமா கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    Day 19 Protest Dharmendra Pradhan Hunger Strike NEET NEET Controversy sonam wangchuk
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலிபியா : அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து..! 50 பேர் மாயம் என தகவல்..!
    Next Article 2-வது முறையாக இன்று அமைச்சரவைக் கூட்டம் ; பட்ஜெட் திட்டங்கள் குறித்து ஆலோசனை
    Editor TN Talks

    Related Posts

    நவோதயா பள்ளிகள் விவகாரம்: 3 வாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

    July 16, 2026

    தவெக எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் – சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவா?

    July 16, 2026

    லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை..! நிலத்தை விற்று படிக்க அனுப்பியதாக பெற்றோர் புலம்பல்..!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நவோதயா பள்ளிகள் விவகாரம்: 3 வாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

    தவெக எம்.எல்.ஏவிடம் குதிரை பேரம் – சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவா?

    லண்டனில் இந்திய மாணவி குத்திக் கொலை..! நிலத்தை விற்று படிக்க அனுப்பியதாக பெற்றோர் புலம்பல்..!

    சபரிவர்மன் மரணத்தைச் சுற்றி சர்ச்சை..!! அப்பாவு எழுப்பிய கேள்விகளால் சூடுபிடித்த விவகாரம்!

    பொள்ளாச்சி : காடர் இன மக்களின் குரலாய் வெளியான ’அருள்வான்’ திரைப்படம்..! மலைவாழ் மக்களுக்கு சிறப்புக் காட்சி..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.