Close Menu
    What's Hot

    மறக்க முடியுமா..?? ஜூலை 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்து.. 94 குழந்தைகளுக்கு உருக்கமான அஞ்சலி!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ; மோடி அரசுக்கு என்னென்ன கேள்விகள்?-  காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    ஹார்முஸ் நீரிணை கப்பல்களில் இந்திய மாலுமிகளை நியமிக்க தடை விதிப்பு..!! அதிரடி உத்தரவு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!! தவெக அரசின் முதல் பட்ஜெட்டுக்கு பச்சைக்கொடி?
    Featured

    விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..!! தவெக அரசின் முதல் பட்ஜெட்டுக்கு பச்சைக்கொடி?

    editor5By editor5July 16, 2026Updated:July 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 3 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் தேதி உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் (தவெக) முதலிடத்தைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காததால், திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான இந்த புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படத் தொடங்கியுள்ளது.

    இம்மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய தவெக அரசு திட்டமிட்டுள்ளது. தவெகவின் முதல் பட்ஜெட் என்பதால், தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு புதிய திட்டங்கள், நலப்பணிகள் மற்றும் அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண்மை, தொழில், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளது.

    பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் 22-ம் தேதி வரை துறை வாரியாக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டுக்கான முக்கிய அம்சங்கள், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குதல், பல்வேறு தொழில் முதலீட்டு திட்டங்கள், புதிய நிறுவனங்களின் அமைப்பு மற்றும் பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    தவெக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை விரைவில் செயல்படுத்தும் என எதிர்பார்ப்பு நிலவும் வேளையில், இன்றைய கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    cm vijay meeting
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலஞ்சம், மோசடி ; சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் பணியிடை நீக்கம்
    Next Article மீண்டும் ஒரு ’குஷி’… ஹீரோவாகும் லியோனல் மெஸ்சி – வைரலாகும் புகைப்படம்!
    editor5

    Related Posts

    மறக்க முடியுமா..?? ஜூலை 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்து.. 94 குழந்தைகளுக்கு உருக்கமான அஞ்சலி!

    July 16, 2026

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ; மோடி அரசுக்கு என்னென்ன கேள்விகள்?-  காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    July 16, 2026

    ஹார்முஸ் நீரிணை கப்பல்களில் இந்திய மாலுமிகளை நியமிக்க தடை விதிப்பு..!! அதிரடி உத்தரவு..!!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மறக்க முடியுமா..?? ஜூலை 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்து.. 94 குழந்தைகளுக்கு உருக்கமான அஞ்சலி!

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ; மோடி அரசுக்கு என்னென்ன கேள்விகள்?-  காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    ஹார்முஸ் நீரிணை கப்பல்களில் இந்திய மாலுமிகளை நியமிக்க தடை விதிப்பு..!! அதிரடி உத்தரவு..!!

    மியான்மரில் அகதிகள் படகுகள் கவிழ்ந்த சோகம்; 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐ.நா. அச்சம்

    தமிழகத்திலும் இனி ‘ரெஸ்டோ பார்’ முறை?. வருவாயை பெருக்க டாஸ்மாக் அதிரடி திட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.