Close Menu
    What's Hot

    அதிக கோல்கள் அடித்தால் மட்டும் போதாது! “கோல்டன் பூட்” விருதுக்கான பிஃபா-வின் புதிய விதிகள் என்ன?

    அதிமுகவினர் மாறவில்லை ; தவெகவால் விலை பேசப்பட்டவர்கள் கட்சி மாறியிருக்கிறார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

    அரசு பேருந்து கட்டணத்திலேயே 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்!. முதலமைச்சரிடம் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பழநி கோயில் நில மோசடி விவகாரம்..! அறநிலையத்துறை அதிகாரிகள் சிபிசிஐடி விசாரணை..!
    Featured

    பழநி கோயில் நில மோசடி விவகாரம்..! அறநிலையத்துறை அதிகாரிகள் சிபிசிஐடி விசாரணை..!

    Editor web4By Editor web4July 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் பழநி அறநிலையத்துறை அதிகாரிகள் 5-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாஜிதா தீவிர விசாரணை மேற்கொண்டார்.

    திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் ரூ.2 கோடிக்கு மோசடிப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து பழநி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், பழநி அடிவாரம் போலீசார் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இருவருக்கும் மேற்பட்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக, இன்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட பழநி அறநிலையத்துறை வழக்கு தாக்கல் செய்த முருகானந்தம், வருவாய்த்துறை சேர்ந்த தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம், மதுரையில் இருந்து வருகை தந்த சிபிசிஐடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாஜிதா நேரில் விசாரணை மேற்கொண்டார்.

    இந்த விசாரணையின் மூலம் மோசடியில் தொடர்புடைய மேலும் பல முக்கியப் புள்ளிகள் குறித்த விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகூடலூர்; சாலையில் திடீரென வந்த ஒற்றைக் காட்டு யானை – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்கள்
    Next Article கரூரில் வைரலான போஸ்டர்… விஜய், ஜோதிமணி பெயர்களால் கிளம்பிய விவாதம்..!!
    Editor web4

    Related Posts

    அதிக கோல்கள் அடித்தால் மட்டும் போதாது! “கோல்டன் பூட்” விருதுக்கான பிஃபா-வின் புதிய விதிகள் என்ன?

    July 17, 2026

    அதிமுகவினர் மாறவில்லை ; தவெகவால் விலை பேசப்பட்டவர்கள் கட்சி மாறியிருக்கிறார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

    July 17, 2026

    அரசு பேருந்து கட்டணத்திலேயே 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்!. முதலமைச்சரிடம் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிக கோல்கள் அடித்தால் மட்டும் போதாது! “கோல்டன் பூட்” விருதுக்கான பிஃபா-வின் புதிய விதிகள் என்ன?

    அதிமுகவினர் மாறவில்லை ; தவெகவால் விலை பேசப்பட்டவர்கள் கட்சி மாறியிருக்கிறார்கள் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

    அரசு பேருந்து கட்டணத்திலேயே 500 ஆம்னி பேருந்துகளை இயக்க தயார்!. முதலமைச்சரிடம் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

    காவிரி நீர்;  ஒன்றிய அரசு விவசாயிகளை ஏமாற்றுகிறது – அமைச்சர் ஷாஜஹான் குற்றச்சாட்டு!

    “இப்போது சிரிப்பார்கள்… நாளை என்னைத் தேடி வருவார்கள்!” – சீமான் சீரியஸ் பேச்சு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.