Close Menu
    What's Hot

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: நீட், ராமர் கோயில் விவகாரங்களால் அனல் பறக்க வாய்ப்பு!

    ஃபிஃபா கால்பந்து 2026: அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஸ்பெயின்!

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பழனி கோவில் நில விவகாரம்: ‘நினைத்தவுடன் பதிவு முடியாது’… புதிய கேள்வி எழுப்பிய Ex அமைச்சர் மூர்த்தி..!!
    Featured

    பழனி கோவில் நில விவகாரம்: ‘நினைத்தவுடன் பதிவு முடியாது’… புதிய கேள்வி எழுப்பிய Ex அமைச்சர் மூர்த்தி..!!

    editor5By editor5July 19, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 4 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த வழக்கில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி வலியுறுத்தியுள்ளார். மேலும், எந்த சொத்தையும் நினைத்தவுடன் பதிவு செய்ய முடியாது என்றும், ‘எதார்த்தமாக நடந்துவிட்டது’ என அமைச்சர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

    மதுரை ஐயர் பங்களா பகுதியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மூர்த்தி, இந்த விவகாரம் குறித்து விரிவாக பேசினார். “அறநிலையக் குழு சொத்தான பழனி முருகன் பாலா தண்டபாணி கோயில் நிலம் பத்திரப் பதிவு மூலம் மோசடிக்கு உள்ளாகியுள்ளது. இது ஏன் நடந்தது? யார் யார் இதற்கு உடந்தையாக இருந்தார்கள்? என்பது குறித்து இரு நாட்களாக பொதுமக்கள் இடையே பெரும் விவாதம் நிலவுகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த மோசடியைக் கண்டித்துள்ளன. காரணமாக இருந்த அனைவருக்கும் எதிராக உடனடியாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

    முன்னாள் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் என்ற முறையில் அவர் விளக்கமளித்தபோது, “கோயில் நிலங்கள், அரசு நிலங்கள், நீர் நிலைகள், புறம்போக்கு சொத்துகள் ஆகியவற்றை எந்தப் பத்திர அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியாது. ஒரு சொத்தைப் பதிவு செய்ய வேண்டுமென்றால் டோக்கன் முறைப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும். டோக்கன் இல்லாமல் பதிவு செய்யவே முடியாது. இதைத் தெரியாமல் பதிந்துவிட்டதாகவோ அல்லது தவறுதலாக நடந்துவிட்டதாகவோ சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்தார்.

    தற்போதைய ஆட்சியின் மீது குற்றம் சாட்டிய மூர்த்தி, “கடந்த ஐந்தாண்டுகளில் நடந்ததைப் பற்றி பேசாமல், தற்போதைய அமைச்சர்கள் முந்தைய ஆட்சியை குறைகூறுகின்றனர். ஆனால் இந்த மோசடி இவர்கள் ஆட்சியில்தான் நடந்துள்ளது. சட்டத்துறை மற்றும் மின்துறை அமைச்சர் இரட்டைப் பொறுப்பில் இருந்தும், எல்லா துறைகளுக்கும் பதில் சொல்கிறார். அவர் முதலமைச்சரின் நிழலாகச் செயல்படுகிறார். அறநிலையத் துறையில் கோயில் நிலம் ஒரு சென்ட் கூட பதிவு செய்யக் கூடாது என்ற தெளிவான உத்தரவு இருந்தும் அதை மீறியுள்ளனர்” என்றார்.

    மேலும், தன்மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், “தமிழகத்தின் 516 பதிவு அலுவலகங்களில் நான் ஆட்களை நியமித்து பணம் பெற்றதாக அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். என் பெயரை நேரடியாகச் சொல்கிறார். இதை அவர் நிரூபிக்க வேண்டும். பதிவுத் துறையில் நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது. எல்லா அலுவலகத்திலும் ரெக்கார்டுகள் உள்ளன” என்று சவால் விட்டார்.

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் அமைச்சர் ஊடகங்களை சந்திப்பதிலேயே கவனம் செலுத்துவதாகவும், மதுரைக்கு என்ன செய்தார் என்றும் மூர்த்தி கேள்வி எழுப்பினார். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை 60 அலுவலகங்களில் சோதனை நடத்தி 37 லட்சம் ரூபாய் கையாடல் செய்யப்பட்டதை கண்டுபிடித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

    இந்த நில மோசடி விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் இந்த குற்றச்சாட்டுகள் ஆளும் தி.மு.க. அரசுக்கு புதிய சவாலாக அமைந்துள்ளது.

    ex minister moorthy land scam palani murugan temple
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதேசிய அளவில் விருதுகளை குவித்த தமிழ்த் திரையுலகம்..!! முதலமைச்சர் விஜய் வாழ்த்து..!!
    Next Article ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து..!! இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தருணம்..!!
    editor5

    Related Posts

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: நீட், ராமர் கோயில் விவகாரங்களால் அனல் பறக்க வாய்ப்பு!

    July 20, 2026

    ஃபிஃபா கால்பந்து 2026: அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஸ்பெயின்!

    July 20, 2026

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: நீட், ராமர் கோயில் விவகாரங்களால் அனல் பறக்க வாய்ப்பு!

    ஃபிஃபா கால்பந்து 2026: அர்ஜென்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஸ்பெயின்!

    அபாதான் புறநகர் பகுதியில் ஏவுகணை தாக்குதல்; உயிரிழப்பு இல்லை என ஈரான் தகவல்

    3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 388 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

    கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற ஈரோடு மாணவர்கள்… கறி விருந்து கொடுத்த நடிகர் ஜீவா

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.