Close Menu
    What's Hot

    ஆய்வுக்காக ஸ்கூட்டியில் பறந்து வந்த அமைச்சர் ஆனந்த்..!! காரணம் இதுதான்..!!

    “போராடினாலே தடியடியா…?” – உச்ச நீதிமன்றம் காட்டம்

    நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்…  விஜய்யை கடுமையாகச் சாடிய கோகுல இந்திரா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நீலகிரியில் மர்ம பூச்சி..!! உலா வரும் ‘கருப்புப் படை’யால் வெளியே வர தயங்கும் மக்கள்..!! பின்னணி என்ன..??
    Featured

    நீலகிரியில் மர்ம பூச்சி..!! உலா வரும் ‘கருப்புப் படை’யால் வெளியே வர தயங்கும் மக்கள்..!! பின்னணி என்ன..??

    editor5By editor5July 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 21 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட சேலாஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறிய கருப்பு நிற பூச்சிகளின் திடீர் படையெடுப்பு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. ஆயிரக்கணக்கான பூச்சிகள் மாலை நேரத்தில் விளக்குகளைச் சுற்றி வட்டமடித்து, வீடுகள், கடைகள் மற்றும் சாலைகளில் மொய்க்கத் தொடங்கியதால் பகுதி மக்கள் தங்கள் வீடுகளை சிறை போல் மூடி வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

    இந்தப் பூச்சிகள் கடிக்காதவை, உடம்பில் உட்கார்ந்தாலும் நமைச்சல் அல்லது எரிச்சல் ஏற்படுத்தாதவை என்றாலும், உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றில் விழுந்து மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. “கதவு, ஜன்னல்களைத் திறந்தாலும் பூச்சிகள் உள்ளே புகுந்துவிடுகின்றன. சமைப்பதும், சாப்பிடுவதும் கடினமாகிவிட்டது” என்கின்றனர் சேலாஸ் பகுதி வாசிகள்.

    பகல் நேரங்களில் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், மாலை விளக்குகள் எரியத் தொடங்கியதும் பூச்சிகளின் எண்ணிக்கை பெருகுகிறது. வியாபாரிகளும் இதனால் பெரும் இழப்பை சந்தித்தனர். கடைகளுக்குள் பூச்சிகள் மொய்க்கவே, பலர் கடையை அடைத்து வீட்டுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதைத் தொடர்ந்து சேலாஸ் வியாபாரிகள் போராட்டத்துக்கு முன்வந்ததால், உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

    குன்னூர் நகராட்சி சுகாதாரத் துறை கொசு மருந்து அடிக்கும் வாகனங்கள் மூலம் புகை தெளித்ததுடன், பிளீச்சிங் பவுடர் தெளித்து பூச்சிகளின் பரவலை ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளது. இந்தப் பூச்சிகள் ஒரு நாள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. மாலையில் வந்து விளக்குகளில் அமர்ந்தவை காலையில் இறந்து வீட்டு வாசல்களில் குவிகின்றன. இறந்த பூச்சிகளில் இருந்து வாடை வீசுவதால், மக்கள் தினமும் டெட்டால் தெளித்து சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதே பிரச்சனை சேலாஸிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கிளிஞ்சடா பகுதியிலும் இருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

    ஓடு வீடுகளில் விளக்குகள் இருக்கும் இடங்களில் இந்தப் பூச்சிகள் அதிகம் குவிவதாகக் கூறப்படுகிறது. மருத்துவர்கள் இதுவரை இந்தப் பூச்சிகளால் கடி அல்லது நச்சுப் பாதிப்பு ஏற்பட்டு யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை என உறுதிப்படுத்தினர். வனத்துறைக்கும் இது தொடர்பான எந்தப் புகாரும் வரவில்லை. தற்போது பூச்சி தொல்லை கணிசமாகக் குறைந்துள்ள போதிலும், மக்கள் இன்னும் உணவுப் பொருட்கள் மற்றும் ஜன்னல்களை மூடியே வைத்துள்ளனர். இந்த அரிய பூச்சி படையெடுப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து துல்லியமான அறிவியல் விளக்கம் இன்னும் கிடைக்கவில்லை.

    black insect nilgris
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதற்காலிக போர் நிறுத்தம்!. கச்சா எண்ணெய் விலை சரிவு!
    Next Article மர்ம நபரால் தொடர் தொல்லை: காவல் ஆணையரிடம் சென்னை மேயர் பிரியா பரபரப்பு புகார்!
    editor5

    Related Posts

    ஆய்வுக்காக ஸ்கூட்டியில் பறந்து வந்த அமைச்சர் ஆனந்த்..!! காரணம் இதுதான்..!!

    July 27, 2026

    “போராடினாலே தடியடியா…?” – உச்ச நீதிமன்றம் காட்டம்

    July 27, 2026

    நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்…  விஜய்யை கடுமையாகச் சாடிய கோகுல இந்திரா!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆய்வுக்காக ஸ்கூட்டியில் பறந்து வந்த அமைச்சர் ஆனந்த்..!! காரணம் இதுதான்..!!

    “போராடினாலே தடியடியா…?” – உச்ச நீதிமன்றம் காட்டம்

    நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்…  விஜய்யை கடுமையாகச் சாடிய கோகுல இந்திரா!

    முதலமைச்சர் தனிப்பிரிவு முன் அவசர பாதுகாப்பு ஏற்பாடு..!! தீயணைப்பு வீரர்கள் நியமனம்!

    வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா!. 2024 சட்டத்திற்கும் புதிய 2026 மசோதாவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்!. 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.