Close Menu
    What's Hot

    ஏசி ரயில் பெட்டியில் 40 கிலோ கஞ்சா… ‘பலே’ கடத்தல் டெக்னிக்… பிடிபட்டது எப்படி?

    கொஞ்சம் கொஞ்சமாக சரியும் அதிமுக கோட்டை..!! 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவு..!!

    காமராஜர் காலை உணவுத் திட்ட டெண்டர்..!! கடும் நிபந்தனைகள் விதித்த தமிழக அரசு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காவிரி உரிமையில் சமரசம் கூடாதாம்..!! கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் ‘வார்னிங்’..!!
    Featured

    காவிரி உரிமையில் சமரசம் கூடாதாம்..!! கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் ‘வார்னிங்’..!!

    editor5By editor5July 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2026 07 27 at 2.28.25 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா சென்று அம்மாநில முதலமைச்சருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெளியான தகவலுக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரின் கர்நாடகா பயணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், அமைச்சர்கள் தரப்பில் வரும் தகவல்களின் அடிப்படையில் காவிரி விவகாரத்துக்காகவே அந்த பயணம் இருக்கலாம் என யூகிக்கப்படுவதாகக் கூறினார்.

    துரைமுருகன் கூறுகையில், “காவிரி விவகாரத்தில் தற்போது இரு முக்கியப் பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, மாதாந்திர அடிப்படையில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா வழங்காதது. இரண்டாவது, மேகதாது அணை திட்டம். உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாக இருக்கும் நிலையில், கர்நாடக அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவது நீதிமன்ற உத்தரவின் வலிமையை குறைக்கும் அபாயம் உள்ளது” என்றார்.

    காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு, மத்திய நீர்வள ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் மூலமாகவே தமிழகத்தின் உரிமையை வலியுறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தங்களது ஆட்சிக் காலத்திலும் இதே காரணத்தால் கர்நாடகாவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை என்றும் அவர் நினைவூட்டினார். மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காத நிலை ஏற்படும் என்று எச்சரித்த துரைமுருகன், இது பல ஆண்டுகளாக நீடிக்கும் மிக முக்கியமான பிரச்சினை என்றார்.

    முதலமைச்சர் கர்நாடகா செல்லும் முன்பு சட்டமன்ற எதிர்க்கட்சிகள் அல்லது அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி ஆலோசனை செய்திருக்க வேண்டும் என்றும், அது செய்யப்படாதது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார். எம்.ஜி.ஆர். காலத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதை சுட்டிக்காட்டிய செய்தியாளருக்கு பதிலளித்த அவர், “அப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பு இல்லை. தற்போது தமிழகத்தின் கையில் நீதிமன்ற உத்தரவு இருப்பதால் இரு சூழல்களையும் ஒப்பிட முடியாது” என்றார்.

    மாநில அரசின் கடன் பற்றிய கேள்விக்கு, “எந்த அரசும் கடன் வாங்காமல் ஆட்சி நடத்த முடியாது. கடனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்” என்று துரைமுருகன் கூறினார்.

    cm vijay Duraimurugan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ.28 கோடி ஊழல் வழக்கு.. Ex. அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு செக் வைத்த சென்னை ஐகோர்ட்..!!
    Next Article இனி நடக்கப்போகும் சம்பவத்தை மட்டும் பாருங்க..!! மார்க்கண்டேயனை நேரில் சந்தித்த உதயநிதி பாய்ச்சல்..!!
    editor5

    Related Posts

    ஏசி ரயில் பெட்டியில் 40 கிலோ கஞ்சா… ‘பலே’ கடத்தல் டெக்னிக்… பிடிபட்டது எப்படி?

    July 27, 2026

    கொஞ்சம் கொஞ்சமாக சரியும் அதிமுக கோட்டை..!! 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவு..!!

    July 27, 2026

    காமராஜர் காலை உணவுத் திட்ட டெண்டர்..!! கடும் நிபந்தனைகள் விதித்த தமிழக அரசு..!!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஏசி ரயில் பெட்டியில் 40 கிலோ கஞ்சா… ‘பலே’ கடத்தல் டெக்னிக்… பிடிபட்டது எப்படி?

    கொஞ்சம் கொஞ்சமாக சரியும் அதிமுக கோட்டை..!! 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைவு..!!

    காமராஜர் காலை உணவுத் திட்ட டெண்டர்..!! கடும் நிபந்தனைகள் விதித்த தமிழக அரசு..!!

    சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்..!! ஜூலை 31 முதல் கடைகளில் விற்கப்படாது..!! வணிகர்கள் சொல்லும் காரணம் என்ன?

    “நான் யார் தெரியுமா?”. பதவி விலகலுக்குபின் தர்மேந்திர பிரதான் சொன்ன மாஸ் பன்ச்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.