Close Menu
    What's Hot

    சர்வதேச புலிகள் தினம் இன்று..!! பிரதமர் மோடி சொல்வது என்ன..??

    விஜய் அரசின் அதிரடி… குறைந்த அளவில் தீர்மானங்களை நிறைவேற்றும் சென்னை மாநகராட்சி

    டாஸ்மாக் முறைகேடு.. தமிழகம் முழுவதும் 41 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ரூ.7,000 கோடியில்.. பெண்களுக்காக முதல்வர் விஜய்யின் அசத்தல் மூவ்..!! என்ன தெரியுமா..??
    Featured

    ரூ.7,000 கோடியில்.. பெண்களுக்காக முதல்வர் விஜய்யின் அசத்தல் மூவ்..!! என்ன தெரியுமா..??

    editor5By editor5July 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 20 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசு இளம்பெண்கள் மற்றும் நலிவடைந்த சமூகப் பிரிவினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக முக்கிய முடிவு எடுத்துள்ளது. முதலமைச்சர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டுறவுத் துறை ஆய்வுக் கூட்டத்தில், ‘சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்’ என்ற பெயரில் புதிய தொழில்முனைவோர் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்கள் மூலம் இளம்பெண்கள் மற்றும் பின்தங்கிய பிரிவினர் தொழில் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்தவும் கடன் வழங்கப்படும். இந்தாண்டில் மட்டும் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.7,000 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் மூலம் இக்கடன்கள் வழங்கப்படும்.

    மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் ரேஷன் கடைகள் மேம்பாடு மற்றும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டுறவுத் துறை ஏற்கனவே பயிர் கடன், நகைக் கடன், சுய உதவிக் குழுக் கடன், சிறு வணிகக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகைக் கடன்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. இப்புதிய திட்டம் அந்தத் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

    தமிழக பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் தொடர் ஆய்வுக் கூட்டங்களில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டுவரப்படும் இந்தத் திட்டம், மாநிலத்தில் சுய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தி, நலிவடைந்த பிரிவினருக்கு நேரடி பலன் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    cm vijay TN Government women debt
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜப்பானை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு.. 13 பேர் பரிதாப பலி!
    Next Article மீண்டும் களத்தில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை! கரூரில் செந்தில் பாலாஜி வீட்டில் அதிரடி ரெய்டு!
    editor5

    Related Posts

    சர்வதேச புலிகள் தினம் இன்று..!! பிரதமர் மோடி சொல்வது என்ன..??

    July 29, 2026

    விஜய் அரசின் அதிரடி… குறைந்த அளவில் தீர்மானங்களை நிறைவேற்றும் சென்னை மாநகராட்சி

    July 29, 2026

    டாஸ்மாக் முறைகேடு.. தமிழகம் முழுவதும் 41 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சர்வதேச புலிகள் தினம் இன்று..!! பிரதமர் மோடி சொல்வது என்ன..??

    விஜய் அரசின் அதிரடி… குறைந்த அளவில் தீர்மானங்களை நிறைவேற்றும் சென்னை மாநகராட்சி

    டாஸ்மாக் முறைகேடு.. தமிழகம் முழுவதும் 41 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!

    ஆடிப்பெருக்கு…உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ. 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை…

    பழநி : சூடுபிடிக்கும் ரூ.100கோடி நில மோசடி வழக்கு..! 4 பேரை கைது செய்து சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.